பிந்து மாதவிக்கு இவ்வளவு திறமையா… வியந்து பாராட்டும் ரசிகர்கள் !

சென்னை : பார்ப்பதற்கு அழகு பதுமைபோல இருக்கும் பிந்து மாதவி தனது ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக ஆக்கும் வகையில் நீர்ச்சருக்கு விளையாட்டு பயிற்சியை கற்று வருகிறார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பிந்து மாதவி, நடிகர் சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு உள்ளிட்ட சில வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக உள்ள நடிகை பிந்துமாதவி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். ஆவக்காய் பிரியாணி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழுக்கு பொக்கிஷம் மற்றும் வெப்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அறிமுகமானதைத் தொடர்ந்து கழுகு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்து நல்ல நடிகை என்ற பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.

கல்யாணி டீச்சராக

கல்யாணி டீச்சராக

சிவ கார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்து அசத்தினார் பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தான். அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்த இவர் 2016 இல் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. பின்னர் ஒரு வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார் ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

படங்கள் இல்லை

படங்கள் இல்லை

பிந்து மாதவி நடித்த படங்களில் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கழுகு, தேசிங்கு ராஜா போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. ஆனால், பிந்து மாதவியை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு எந்த திரைப்படங்களும் அமையவில்லை.

பகைவனுக்கு அருள்வாய் படத்தில்

பகைவனுக்கு அருள்வாய் படத்தில்

இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வரும் யாருக்கும் அஞ்சேல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிந்து மாதவி அதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதில் பிரபல கன்னட நடிகர் சதீஷ் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளார். பகைவனுக்கு அருள்வாய் சூப்பர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Recommended Video

Bindhu Madhavi Waiting for Simbu's Wife | Simbhu Bold Statement
நீர்ச்சருக்கு பயிற்சி

நீர்ச்சருக்கு பயிற்சி

இந்த நிலையில், நடிகை பிந்து மாதவி நீர்ச்சருக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகிறாராம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீர்ச்சருக்கு விளையாட்டு வகுப்புக்கு சென்று வருவதாக புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். மேலும், நீர்ச்சருக்கு பலகையையும் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில்,பல ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X