சீனியர் ஹீரோ ஜோடியாக நடிக்க இவ்வளவு சம்பளமா? வாவ் கேத்தரின் வாவ்
சென்னை: சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணாவுடன் நடிப்பதற்கு நடிகை கேத்தரின் தெரசா ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
தமிழில், கார்த்தி நடித்த மெட்ராஸ், விஷாலின் கதகளி, கணிதன், கதாநாயகன், வந்தா ராஜாவாதான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா. இவர் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துவருகிறார்.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்
இப்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்துவருகிறார். இதில் ராஷிகண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட 4 ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். அதில் ஒருவராக, கேத்தரினும் நடிக்கிறார்.

சோனாக்ஷி சின்ஹா
இதையடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். போயபதி ஶ்ரீனு இயக்கும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் கேத்தரின்.
முதலில் இந்தக் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாகக் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்தே இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு கோடி சம்பளம்
இதில் நடிக்க கேத்தரின் தெரசாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கோடி சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் லிஸ்டில் முதன்முறையாக இணைந்துள்ளார் கேத்தரின்.

முதல் பாதிவரை
இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். முதல் பாதிவரை ஒருவரும் இரண்டாம் பாதியில் வேறொருவரும் நடிக்க உள்ளனர். ஒரு ஹீரோயினாக கேத்தரின் நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினிடம் பேசி வருகிறோம். இரண்டு ஹீரோயின்களும் கதைப்படி சந்தித்துக்கொள்ள மாட்டார்கள் என்று படக்குழு தெரிவித்தது.

கே.எஸ்.ரவிகுமாரின் ரூலர்
இந்நிலையில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ரூலர் படம் இன்று வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள இதில் வேதிகா, சோனல் சவுகான், பிரகாஷ்ராஜ், பூமிகா உட்பட பலர் நடித்துள்ளனர். கல்யாண் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











