மாப்பிள்ளைக்காகதான் காத்திருக்கிறேன்.. கிடைத்ததும் டும்டும்டும்தான்.. பிரபல நடிகை பளீச்!
சென்னை: மாப்பிள்ளைக்காக காத்திருப்பதாகவும் கிடைத்தவுடன் கல்யாணம் தான் என பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
நடிகை கேத்ரின் தெரேசா கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே வாய்ப்புகள் தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார்.

கேத்ரின் தெரேசா
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக உள்ளார் நடிகை கேத்ரின் தெரேசா. தொடர்ந்து கதகளி, கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக வோர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் கேத்ரின் தெரேசா.

கோபப்பட்டார்
அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை, அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் கோபப்பட்டார்.

காத்திருக்கிறேன்
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்த தகவலை பேசியிருக்கிறார் நடிகை கேத்ரின் தெரேசா. அவர் பேசியிருப்பதாவது, என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். மணமகன் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன். பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன். வீட்டிலும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொல்லை செய்கிறார்கள்.

தெரியவில்லை
காதல் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதே நேரம் காதலிக்க ஏற்ற மாதிரியான ஆணை எனது வாழ்க்கையில் இதுவரை சந்திக்கவில்லை. காதல் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதை விளக்குவது கஷ்டம். நான் காதல் திருமணம் செய்து கொள்வேனா? அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











