அந்த நடிகருடன் நடிக்க உடனே ஓகே சொன்ன நடிகை.. டக்கென உயர்ந்த சம்பளம்.. கேட்டா ஆடிப்போயிடுவீங்க!

சென்னை: மூத்த நடிகருடன் நடிக்க உடனே ஓகே சொன்ன நடிகைக்கு படக்குழு சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் அண்மையில் ரூலர் என்ற படம் வெளியானது.

இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் நடிகை வேதிகா, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

சோனாக்ஷி சின்கா

சோனாக்ஷி சின்கா


இந்நிலையில் பாலகிருஷ்ணா தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில்
கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

வயதை காரணம் காட்டி

வயதை காரணம் காட்டி

ஆனால் சோனாக்ஷி சின்கா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது.

அவர் கோபக்காரர்

அவர் கோபக்காரர்

இதனை தொடர்ந்து படக்குழுவினர் மற்ற நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பாலகிருஷ்ணா கோபக்காரர், அவருடன் நடிக்க பயமாக உள்ளது என்று கூறி நழுவி விட்டார்களாம்.

சட்டென ஓகே

சட்டென ஓகே

இந்நிலையில்தான் படக்குழுவினர் கேத்ரின் தெரசாவை தொடர்பு கொண்டுள்ளனர். அவரோ பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சட்டென ஓகே சொல்லி விட்டாராம்.

உயர்த்தப்பட்ட சம்பளம்

உயர்த்தப்பட்ட சம்பளம்

இதனால் சந்தோஷமடைந்த படக்குழு அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

புலம்பும் நடிகைகள்

புலம்பும் நடிகைகள்

இந்நிலையில் கேத்ரின் தெரசாவுக்கு ஒரே நேரத்தில் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததோடு, சம்பளமும் எகிறியிருக்கிறது. இதுதான் அதிர்ஷ்டம் போல என்று வாய்ப்பை தட்டிக்கழித்த நடிகைகள் புலம்பி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X