பீச்சில் ஹாட்டான டிரஸ்ஸில் ஏடாகூடமான போஸ் கொடுத்த கேத்ரின் தெரேசா!
சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரேசா
தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு என தென் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானவராக உள்ளார்.
தெலுங்கில் சரித்திர பின்னணியில் உருவாகி வரும் பிம்பிசாரா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கேத்ரின் தெரேசா இப்பொழுது ஹாட்டான டிரஸ்ஸில் செம சூடாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்கவிட்டு உள்ளன.

வெற்றிப்படமாக அமைந்தது
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரேசா. அதற்கு முன்பாகவே கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் அறிமுகமான மெட்ராஸ் திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மெட்ராஸ் வெற்றியை தொடர்ந்து கதகளி,கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சரித்திர பின்னணியில்
வந்தா ராஜாவா தான் வருவேன், அருவம்,நீயா 2 மற்றும் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என கேத்ரின் தெரேசா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் கேத்ரின் தெரசாவுக்கு தெலுங்கு நடிகர் கல்யாண் நந்தமுரி நடிப்பில் சரித்திர பின்னணியில் உருவாகி வரும் பிம்பிசாரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில தெலுங்கு படங்களில் கேத்ரின் தெரேசா ஒப்பந்தமாகியுள்ளார்

எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் இவருக்கு கை கொடுக்கும் என்று நினைத்தார் ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற நிலையில் அதன் பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேத்ரின் தெரேசா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை பந்தாடி வருகிறார்.
Recommended Video

பீச்சில் ஏடாகூடமான போஸில்
அந்த வகையில் இப்போது பீச்சில் செம ஹாட்டான சிகப்பு உடையில் ஏடாகூடமான போஸில் பார்க்கும் அனைவரையும் பற்ற வைக்கும் கவர்ச்சியில் உள்ள புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகிறது. இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த கேத்ரின் தெரேசாவை இனி கவர்ச்சியிலும் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











