தீராத காவேரி பிரச்சனை

By Staff

Cauvery
நடிகை காவேரிக்கும், ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சுவார்த்தை மீண்டும் உடன்பாடு காணப்படாமல் முடிந்துள்ளது. 4வது முறையாக ஜனவரி 11ம் தேதி சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஒளிப்பதிவாளர் வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் எனது கணவர். என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வரும் அவர் தற்போது என்னை கைவிட்டு விட்டு உறவுப் பெண்ணைக் கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார். அதைத் தடுத்து நிறுத்தி என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் நடிகை காவேரி காவல்துறையை அணுகினார்.

இதையடுத்து வைத்தியின் கல்யாணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய வைத்தி, முன்ஜாமீன் கோரினார். அப்போது காவேரியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்து தன்னையும், தனது கணவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து இருவரும் சமரச தீர்வு மையத்தை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.

இதுவரை 2 முறை இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க சமரச தீர்வு மைய உறுப்பினர்கள் முயன்றும் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று 3வது முறையாக சமரச தீர்வு மையத்திற்கு இருவரும் வந்திருந்தனர்.

இருவரையும் தனித் தனியாகவும், சேர்த்து உட்கார வைத்தும் பேச்சு நடந்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவித உடன்பாடும் இல்லை. வைத்தி தனது நிலையில் உறுதியாக இருப்பதாலும், பிடிவாதமாக இருப்பதாலும் தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஜனவரி 11ம் தேதி மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று உடன்பாடு ஏற்பட்டால் வைத்திக்கு முன் ஜாமீன் கிடைக்கும். இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X