மியா கலிபா, சன்னி லியோன் எல்லாம் ஓரம்போங்க…ரூட்டு மாறிய சாந்தினி தமிழரசன் !
நடிகை சாந்தினி தமிழரசன் கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
சென்னை பெண்ணான சாந்தினி தமிழரசன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால், விசுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றார். இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார்
அப்போது,பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது.

சாந்தினி தமிழரசன்:சித்து +2 படம் மூலம் நடிகையானவர் சாந்தினி தமிழரசன். நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அவர் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
காதல் திருமணம்:சென்னை பெண்ணான சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.

பொம்மை படத்தில்:நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

கவர்ச்சி போட்டோ:நடிகை சாந்தினி, சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மியா கலிபா, சன்னி லியோன் எல்லாம் ஓரம்போங்க என்றும், இனிமேல் சாந்தினிதான் மாஸ் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











