ரசிகர்களை மயக்கும் கனவுகன்னி.. கவர்ச்சி ஆடையில் அலறவிட்ட நடிகை சாந்தினி!

சென்னை: வெள்ளித்திரையில் அறிமுகமாகி அங்கு சரியாக வாய்ப்பு கிடைக்காததால், சீரியல்களில் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நடிகை சாந்தினி தமிழரசன். தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களை குஷிப்படுத்த அட்டகாசமான போட்டோவை பகிர்ந்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சாந்தினி தமிழரசனுக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால், விசுவல் கம்யூனிகேஷன் தான் படிப்பேன் என பெற்றோரிடம் அடம்பிடித்து படித்துள்ளார். அதைத்தொடர்ந்து கே.பாக்யராஜ் இயக்கிய, தனது மகன் சாந்தனுவை ஹீரோவாக நடிக்க வைத்த சித்து பிளஸ் 2 படத்தில், சாந்தனுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். ஆனால், சித்து +2 எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். டோலிவுட்டுக்கு சென்ற சாந்தினிக்கு தெலுங்கு திரையுலகம் வாய்ப்பு கொடுத்ததால், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

chandini tamilarasan photos
Photo Credit:

சாந்தினி தமிழரசன்: என்னத்தான் தெலுங்கு சினிமாவில் ஓரளவிற்கு வாய்ப்பு வந்தாலும், தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியிவில்லை என்கிற கவலை சாந்தினிக்கு இருந்ததால், தமிழில் பட வாய்ப்பை தேடி அலைந்தார். அப்போது தான், 2018 ஆம் ஆண்டு டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரயலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தார்.

அலறவிட்ட நடிகை: சீரியலில் நடித்து வந்த சாந்தினி தமிழரசனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் பிரகாஷ் இயக்கிய குடிமகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பின், பொம்மை, சைரன், ஆலகாலம், வல்லான், தினசரி, ஃபயர்,பெருசு, ட்ராமா என அடுத்தடுத்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வந்த, சாந்தினி, ஜே.எஸ் சதீஷ்குமார் இயக்கிய ஃபயர் படத்தில் துர்கா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களை காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களுடன் எல்லை மீறி பழகி, அதை வீடியோவாக எடுத்துவைத்து, பணம் கேட்டு மிரட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தில், சாந்தினி தமிழரசன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன், தனது ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் இவர், கறுப்பு உடையில் தனது பளபளக்கும் உடலை காட்டி, சொக்கவைக்கும் பார்வையாளர் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலர் இதயத்தை பரிசாக அளித்து அவரை கொண்டாடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X