லேட்டஸ்ட் சில்க்.. ஜி.வி. பிரகாஷ் ஆடியோ லாஞ்சுக்கு எப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்துருக்காரு பாருங்க!
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்த 25வது படமான கிங்ஸ்டன் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில், அவரது 26வது படமாக வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகவுள்ள பிளாக்மெயில் திரைப்படம் நிச்சயம் ஹிட் கொடுக்கும் என இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். அடுத்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவர்ச்சி பேயாக வந்து ரசிகர்களை கிறங்கடித்த இந்த காலத்து சில்க் ஸ்மிதாவான சந்திரிகா ரவி பிளாக்மெயில் இசை வெளியீட்டு விழாவுக்காக தான் சேலை கட்டி ரெடியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சந்திரிகா ரவி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டாலே விவகாரமாகத்தானே இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களை இந்த முறையும் ஏமாற்றாத வகையில் அவர் தாராள கவர்ச்சியை காட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் சில்க் ஸ்மிதா: இந்தியாவை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த நடிகை சந்திரிகா ரவி 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். செய், உன் காதல் இருந்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்கின்றனர். மேலும், பான் இந்தியா படமாக உருவாகி வரும் சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் இவர் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேலையை சரிய விட்டு: நடிகைகள் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாலே ஆடை அணிவதில் தாராளம் காட்டினாலே போதும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்காக சேலை அணிந்து வந்த சந்திரிகா ரவி தனது சேலையை சரிய விட்டு ஜாக்கெட் தெரிய படு கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கியுள்ளார்.
ஜி.வி.க்கு பிளாக்மெயில் கை கொடுக்குமா?: மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்தின் உதவி இயக்குநரான மு. மாறன் ஏற்கனவே இயக்குநராக இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் ஜி.வி. பிரகாஷ், தேஜு அஸ்வினி, சந்திரிகா ரவியை வைத்து இயக்கியுள்ள பிளாக்மெயில் படம் நிச்சயம் தனக்கு வெற்றிப் படமாக அமையும் என ஜி.வி. பிரகாஷ் குமார் இசை வெளியீட்டு விழாவில் ரொம்பவே நம்பிக்கையாக பேசியுள்ளார். தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷுக்கு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் இந்த பிளாக்மெயில் படமாவது கை கொடுக்க வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
சில்க் ஸ்மிதா படம் எப்போ வரும்?: சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடைசியாக சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்த சின்ன க்ளிம்ப்ஸ் காட்சி மட்டுமே வெளியானது. பெரிய பொருட்செலவில் பல்வேறு மொழிகளில் அந்த படத்தை உருவாக்கி வருகின்றனர். அடுத்த ஆண்டுக்குள் அந்த படம் வெளியாகி விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











