குடிபோதையில் டார்ச்சர்.. அப்பாவை சுட்டு கொன்ற அம்மா.. சிறுவயது துயரத்தை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை!

தன் தாயே தனது தந்தையை சுட்டுக் கொன்றதாக பிரபல ஹாலிவுட் நடிகை சார்லீஸ் கூறியுள்ளார்.

நியூயார்க்: சிறுவயதில் தன் தாயே தனது தந்தையை சுட்டுக் கொன்றதாக பிரபல ஹாலிவுட் நடிகை சார்லீஸ் கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை சார்லீஸ் தெரோன். அமெரிக்க - தென்னாப்பிரிக்க நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான இவர் முன்னாள் மாடலும் ஆவார். 2007 இல் இவர் அமெரிக்கக் குடிமகளாக மாறினார். ஏயிலென் வோர்னோஸ் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார். முக்கிய நடிப்புப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

இந்நிலையில், சிறு வயதில் தன் தந்தையை தன் கண்முன்னேயே தன் தாயார் சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து தற்போது சார்லீஸ் பேசியுள்ளார்.

குடிகாரத் தந்தை

குடிகாரத் தந்தை

அதில், "கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் அந்தச் சம்பவம் நடந்தது. அப்போது எனக்கு 15 வயது. எனது தந்தை உடல்நலம் இல்லாமல் இருந்தார். ஆனால் தினமும் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

குடிபோதையில் வந்தார்

குடிபோதையில் வந்தார்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே அவர் ஒரு குடிகாரராக மட்டுமே நான் அடையாளம் கண்டிருக்கிறேன். இப்போது அதைப் பற்றி பேச நான் வெட்கப்படவில்லை. ஒரு நாள் இரவு வழக்கம் போல் அதிகம் குடித்து விட்டு வந்தார் என் தந்தை.

தாக்க முயற்சி

தாக்க முயற்சி

அப்போது அவரால் நடக்கக்கூட முடியவில்லை. ஆனால் கையில் துப்பாக்கியுடன் அவர் தள்ளாடியபடியே வந்தார். நானும் என் அம்மாவும் பெட்ரூமில் பயத்தில் ஒளிந்திருந்தோம். ஆனால் அக்கதவை அவர் உடைத்து உள்ளே வர முயற்சித்தார்.

தாக்குதல்

தாக்குதல்

இதனால் கதவை ஒட்டியபடி நின்று கொண்டு அவரை உள்ளே வரவிடாமல் நானும் எனது அம்மாவும் முடிந்தவரை போராடினோம். இதனால் கடும் கோபமடைந்த அவர், பின்னோக்கிச் சென்று கதவை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார்.

தற்காப்புக்காக கொலை

தற்காப்புக்காக கொலை

ஆனால் அதிர்ஷ்டவசமாக அதில் எனக்கோ, என் அம்மாவுக்கோ காயம் ஏற்படவில்லை. இறுதியில் தற்காப்புக்காக வேறு வழியே இல்லாமல் என் தந்தையை என் தாயே அவரது துப்பாக்கியால் சுட்டிக் கொன்று விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

சிறை தண்டனை

சிறை தண்டனை

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட துயரம் குறித்து சார்லீஸ் மனம் விட்டு பேசி இருக்கிறார். இந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் என்றபோதும், சார்லீஸ் இப்போது இது குறித்து பேசி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது கணவரைத் தற்காப்புக்காகச் சுட்டதால் சார்லீஸின் தாயார் சிறை தண்டனை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X