Trisha: நீ அதிர்ஷ்டசாலி த்ரிஷா.. நடிகையின் போஸ்டர் குழம்பிய ஃபேன்ஸ்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றது. காலை முதலே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து, இறுதியில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி இத்தகைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றிக்காக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா: நேற்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்து சிறப்பு பூஜை செய்தார். அதேபோல், நடிகை திரிஷா அவர்களின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு மே 3ஆம் தேதி காரில் திருப்பதிக்கு சென்ற அவர், மே 4ஆம் தேதி அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து விஜயின் வெற்றி செய்தியை அறிந்த திரிஷா, நேராக நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்திற்கு சென்றார்.

நீ அதிர்ஷ்டசாலி: இந்த நிலையில், நடிகை சார்மி கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இந்த சிறப்பான நாளில் சிறப்பான கொண்டாட்டம். நீ அதிர்ஷ்டசாலி. இந்த பிறந்தநாள் வரலாற்றில் வெற்றியாக பொறிக்கப்படும். நான் எப்போதும் சொல்வது போல விடாமுயற்சியும் பொறுமையும் முக்கியம். எனது செல்ல மகளே, உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஜய் தேர்தலில் பெற்ற வெற்றியையும், திரிஷாவின் பிறந்தநாளையும் இணைத்து "நீ அதிர்ஷ்டசாலி" என்று சார்மி கவுர் குறிப்பிட்டிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வெற்றி பெற்றதற்கும் திரிஷாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications