நடுக்கடலில் நடிகை சார்மி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !
ஹைதராபாத் : அனைவரையும் வசீகரிக்கும் கொழு கொழு அழகால் தெலுங்கு திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகை சார்மி கவுர்.
மெல்லிய தேகத்துடன் பல நடிகைகள் வந்து கலக்கிக் கொண்டிருக்க ச்சப்பியாக வந்து இறங்கி நடிப்பிலும் கவர்ச்சியிலும் பல்வேறு வித்தியாசங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்த சார்மி தற்பொழுது நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி நடை போட்டு வருகிறார்.
தெலுங்கில் மாஸ் இயக்குனர் என பல பலராலும் புகழப்பட்டு வரும் பூரி ஜெகநாத் இயக்கும் பெரும்பாலான படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்து வரும் சார்மி தற்பொழுது நடுக்கடலில் நின்று கொண்டு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கனவு கன்னியாக
என்றும் இளமையுடன் திகட்டாத கவர்ச்சியுடன் இன்றளவும் இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள சார்மி தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து இன்றளவும் பலரது கனவு கன்னியாக வலம் வருகிறார்.

வருகையை தந்தார்
தெலுங்கில் "நீ தோடு காவாலி" என்ற படத்தின் மூலம் அறிமுகமான சார்மி, தமிழில் டி ராஜேந்திரனின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு தனது வருகையை தந்தார். இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளர் என டி ராஜேந்திரனின் பன்முக கைவண்ணத்தில் இந்த படம் உருவானது.

காதல் அழிவதில்லை
அதுவரையில் குழந்தை நட்சத்திரமாக சிம்பு நடித்து வந்த நிலையில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகம் ஆவதால் டி ராஜேந்திரனின் ரசிகர்களும் சிலம்பரசனின் ரசிகர்களும் மற்றும் சார்மியின் ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்ட நிலையில் காதல் அழிவதில்லை வெளியாகி வெற்றி பெற்று பின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

யூ டர்ன் போட்டு
தனது அறிமுகத்தை தமிழில் கொடுத்து முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்தார். காதல் அழிவதில்லை திரைப்படத்தை தொடர்ந்து காதல் கிசுகிசு மற்றும் ஆஹா எத்தனை பொருத்தம் போன்ற இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால், மீண்டும் தெலுங்கு திரைப்படத்துறைக்கே யூ டர்ன் போட்டு விட்டார்.

தெலுங்கு திரைப்படத்துறைக்கு
தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து விட்டு இது சரிப்பட்டு ஆகாது என மீண்டும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு சென்ற சார்மிக்கு அடித்தது யோகம் என்றது போல தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தார்.

அனைவரையும் அதிர்ச்சியில்
பல படங்களின் மூலம் தெலுங்கு திரைப்படத் துறையில் தனது கொடியை உச்சத்தில் பறக்க விட்டு வந்த சார்மி சில வருடங்களுக்கு முன்பு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து அவரது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இயக்குனர் பூரி ஜெகநாத்
நடிப்பு போனால் என்ன அதான் தயாரிப்பு இருக்கிறதே என மாஸ் இயக்குனர் பூரி ஜெகநாத் உடன் இணைந்து இவர் இயக்கும் பெரும்பாலான படங்களில் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவ்வாறு நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தெலுங்கு திரைப்படத்துறையில் ஆட்கொண்டு வரும் சார்மி இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடுக்கடல் கவர்ச்சி
வெள்ளை நிற டிரான்ஸ்பிரண்ட் உடையில் நடுக்கடலில் நின்றவாறு தலையில் ஒரு ஒத்த ரோசாவை வைத்துக்கொண்டு தனது சூடேற்றும் ச்சப்பி உடலில் உள்ள மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த நடுக்கடல் கவர்ச்சி புகைப்படம் பல்வேறு ரசிகர்களையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











