பண கஷ்டம்... அரசு மருத்துவமனையில் சிகிச்சை... உண்மையில் நடந்தது என்ன? நடிகை ஷர்மிளா அதிரடி தகவல்

By

சென்னை: பணமின்றி கஷ்டப்படுவதாகவும் கவனிக்க ஆளின்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வந்த தகவலை நடிகை ஷர்மிளா மறுத்துள்ளார்.

பிரபல நடிகை ஷர்மிளா. 90- களில் ஹீரோயினாக நடித்த இவர், பார்த்திபனின் தையல்காரன், பிரஷாந்தின், கிழக்கே வரும் பாட்டு, பாதுகாப்பு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் சுரபிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்போது குயின் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

திருமணம், விவாகரத்து

திருமணம், விவாகரத்து

மலையாள நடிகர் கிஷோர் சத்யாவை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவர், பின்னர் விவாகரத்து பெற்றார். அடுத்து ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் மகன் உள்ளார். பின்னர் இரண்டாவது கணவரையும் பிரிந்த ஷர்மிளா, மகன் மற்றும் அம்மாவுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

சினிமா வாய்ப்புகள் இல்லாததால் பண வசதி இல்லாமல் அவதிப்படுவதாகவும் நடிகர் சங்கம் சார்பில் விஷால் அவருக்கு உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்றும் அங்கு அவரை கவனிக்க யாருமில்லை என்றும் பக்கத்து பெட்டில் இருந்தவர்கள் நடிகை என அடையாளம் கண்டு உதவி செய்ததாகவும் தகவல் வெளியானது.

ஷர்மிளா மறுப்பு

ஷர்மிளா மறுப்பு

இந்நிலையில் இந்த தகவலை மறுத்திருக்கிறது ஷர்மிளா. இதுபற்றி அவர் கூறும்போது, ஒரு படப்பிடிப்பின்போது கீழே விழுந்ததில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டேன். அவ்வளவுதான். அதற்காக நான் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறேன் என்று சொல்வது தவறானது.

8 படங்கள்

8 படங்கள்

நான் சில வருடங்களுக்கு அப்படி இருந்தேன் என்பது உண்மைதான். தமிழ், தெலுங்கில் இப்போதும் நடித்துவருகிறேன். நான் நடித்து 8 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அதனால் வாய்ப்பில்லை என்று சொல்வது தவறு.

தைராய்டு

தைராய்டு

எனது உடல்நிலை குறித்து மீடியா சொல்வதும் தவறானது. இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். தைராய்டுக்காக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். அதனால் உடல் எடை அதிகரித்தது. இப்போது எடையை குறைத்துவிட்டேன்.

ஏன் சிகிச்சை

ஏன் சிகிச்சை

அரசு மருத்துவமனையில் ஏன் சிகிச்சை பெற்றீர்கள் என்று கேட்கிறார்கள். பணம் இல்லாததால்தான் அங்கு சிகிச்சை பெற்றேன் என்று சொல்வது சரியானதல்ல. இப்படிச் சொல்வது அரசாங்கத்தை கிண்டல் பண்ணுவதற்கு சமமானது. நான் பப்ளிசிட்டிக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை.

இன்சூரன்ஸ் கார்டு

இன்சூரன்ஸ் கார்டு

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற இன்சூரன்ஸ் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. தவிர நடிகர் சங்கம் கொடுத்திருக்கும் கார்டையும் வைத்திருக்கிறேன். அதை வைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். ஆனால், அது தேவை இல்லை என்று நினைத்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன்.

உதவி செய்ய

உதவி செய்ய

அதோடு என் அம்மா வயதானவர். மகனுக்கு 11 வயதுதான் ஆகிறது. அதனால் வேலைக்காரப் பெண்ணால் மட்டும் எனக்கு உதவி செய்ய முடியாது. அரசு மருத்துவமனையில் நோயாளி களுக்கு உதவி நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரணமாகவும் நான் அங்கு சிகிச்சை பெற சென்றேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஷர்மிளா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X