மகன் பிறக்கவில்லையென்றால் 3ஆவது திருமணம்தான்.. மீண்டும் மீண்டும் முயற்சி.. பிரபல நடிகை ஓபன் டாக்
சென்னை: நடிகை ஷர்மிளா தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். தமிழில் அவர் தொடர்ந்து நடித்தாலும் மலையாள திரையுலகம்தான் அவருக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியது. கடைசியாக அவர் மாதங்கி, மிஸ் மாகி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய பெர்சனல் வாழ்க்கை குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
நல்லதொரு குடும்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷர்மிளா. அதனையடுத்து சில வருடங்கள் கழித்து தமிழில் ஒயிலாட்டம், தையல்காரன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோலை ஏற்றார். தொடர்ந்து மலையாளத்திலும் ஹீரோயினாக அறிமுகமான அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். மோகன் லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஷர்மிளா; தமிழிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஜொலிக்க தொடங்கினார்.
திருமணங்கள்: ஷர்மிளாவின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. முதலில் அவர் நடிகர் கிஷோர் சத்யாவை கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 1999ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதற்கு பிறகு ராஜேஷ் என்பவரை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரையும் 2014ஆம் ஆண்டு டைவர்ஸ் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தனது பெர்சனல் வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஷர்மிளாவின் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "ஆண்கள் எனக்கு ராசியில்லை என்றுதான் நினைக்கிறேன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல்தான் என்னுடைய திருமண வாழ்க்கை சென்றது. ரிலேஷன்ஷிப் செட் ஆகவில்லை என்றால் அதனை விட்டுவிட வேண்டும். ஆனால் நான் அப்படி இல்லை. மீண்டும் மீண்டும் ரிலேஷன்ஷிப்புக்குள் சென்றேன். இதனால் முதல் இரண்டு திருமணங்களுமே தோல்வியில்தான் முடிந்தன. மூன்றாவது திருமணத்துக்கும் நான் முடிவு செய்திருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு மகன் பிறந்தான். அவன் பிறக்கவில்லை என்றால் கண்டிப்பாக மூன்றாவது திருமணம் செய்திருப்பேன்.
சில பயங்கள் இருக்கின்றன: எனக்கு சில பயங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ஒரு முறை செய்த பிறகு சிலர் மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்கள். திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. திருமணம் செய்துகொள்ள மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தேன். ஆனால் அதற்கு பரிசாக தோல்வி மட்டுமே கிடைத்தது. அஹ்டனால் எனக்கு திருமணத்தில் ராசி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
நான் ஒத்துக்கொள்ள வேண்டும்: இந்த விஷயத்தில் நான் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. மாறாக எனக்கு ராசி இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். நான் நடித்த சில படங்கள் எனக்கு பெரிதாக உடன்பாடாக இருந்ததில்லை. ஆனால் அந்தப் படங்கள் பெரிய ஹிட்டாகியிருக்கின்றன. அதிர்ஷ்டம் எனக்கு சினிமாவில் இருந்தது. பெர்சனல் வாழ்க்கையில் குறிப்பாக திருமண விஷயத்தில் இருந்ததில்லை. எப்படி அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் நமது பார்ட்னருடன் பிரச்னை வெடித்துவிடுகிறது. உலகத்துக்கு ஒரு பெண் அழகாக தெரிந்தாலும் கணவருக்கு குரங்காகத்தான் தெரிவார். அதை நான் புரிந்துகொண்டேன்.
அனுபவத்தில் சொல்கிறேன்: நான் அனுபவத்தில் சொல்கிறேன். பெரிதாக கணவர்களுக்கு தங்கள் மனைவி மீது எந்த ஈடுபாடும் இருப்பது போன்று தெரியவில்லை. அவர்களுக்கு மற்ற பெண்கள் மீதுதான் ஈடுபாடு இருக்கிறது.சில பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் நல்ல கணவர் அமைந்திருப்பார். ஆனால் எனக்கு அப்படி இரண்டு முறையும் அமையவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











