தனுஷை சுசித்ரா காதலித்திருக்கலாம்?..அவர் கிளியோபாட்ராவா?..ஹீரோக்கள் படையெடுத்தார்களா?..நடிகை விளாசல்

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் சுசித்ரா. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் விவகாரம் அவரை சுற்றி பெரிய சர்ச்சை வளையத்தை உருவாக்கியது. அதற்கு பிறகு அமைதியாக இருந்த அவர்; இப்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேச ஆரம்பித்திருக்கிறார். எந்தப் பிரச்னை என்றாலும் தனுஷை தவறாமல் இழுக்கும் அவர்; ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்திலும் அதனையே செய்தார்.

ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் பாடகியாக மாறியவர் சுசித்ரா. ஏராளமான பாடல்களை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடியிருக்கிறார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் சுசித்ரா. தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார்.

சர்ச்சையை கிளப்பிய சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் என வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின.

அக்கவுண்ட் ஹேக்?: அந்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்து தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா விளக்கமளித்தார். அதேசமயம் அவரது கணவர் கார்த்திக்கோ, 'சுசித்ரா மன அழுத்தத்தில் இருக்கிறார்' என்று கூறியிருந்தார். இதனையடுத்து சுசித்ராவும், கார்த்திக்கும் விவாகரத்து செய்தார்கள். அதற்கு முக்கிய காரணமே சுச்சி லீக்ஸ் விவகாரம்தான் என்று சொல்லப்பட்டது. பிறகு அமைதியானார் சுசித்ரா.

Actress Charmila Slams Suchitra For Dhanush And Ravi Mohan Issue

மீண்டும் புயல்: சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் சர்ச்சையாக பேச ஆரம்பித்தார். கமல்ஹாசன், அஜித் உள்ளிட்டோர் குறித்து பரபரப்பை கிளப்பும் வகையில் பேசிய அவர்; திரிஷா, தனுஷ், கார்த்திக் உள்ளிட்டோர்தான் சுச்சி லீக்ஸூக்கு முக்கியமான காரணம் என்றார். அதுமட்டுமின்றி தனுஷ் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும் கூறினார். நிலைமை விபரீதிமாக போவதாக உணர்ந்த அவரது முன்னாள் கணவர் கார்த்திக்; சுசித்ரா இப்படி அவதூறாக பேசக்கூடாது என்று நீதிமன்றத்துக்கு சென்று தடை உத்தரவு வாங்கினார்.

அடங்காத சுசித்ரா: இருப்பினும் சுசித்ரா நிறுத்தியபாடில்லை. சமீபத்தில்கூட ரவி மோகன் - ஆர்த்தி - கெனிஷா விவகாரத்தில் தனுஷின் பெயரை இழுத்துவிட்டார். அதாவது தனுஷும், ஆர்த்தியும் இருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். அது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. மேலும் ரவி - கெனிஷாவுக்கு முழு ஆதரவை கொடுத்தார். இந்நிலையில் சுசித்ரா குறித்து பிரபல நடிகை ஷர்மிளா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஷர்மிளா பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "முதலில் கெனிஷாவை தாக்கி போஸ்ட் போட்டார் சுசித்ரா. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு சப்போர்ட் செய்கிறார். இதில் தனுஷ் பெயரை எதற்காக இழுக்க வேண்டும் என்று தெரியவில்லை. தனுஷ் உயர்ந்துகொண்டேதான் போகிறார். ஒருவேளை தனுஷை சுசித்ரா ஒருதலையாக காதலித்திருக்கலாம். அது கைகூடாமல் போயிருக்கலாம். அதனால் எதற்கெடுத்தாலும் தனுஷை இழுக்கலாம்.

அவர் என்ன பெரிய கிளியோபாட்ராவா?: கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை இழுக்கிறார். விஷால் தன்னுடைய வீடு வரைக்கும் வந்ததாக சொல்கிறார். தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை ஹீரோக்களும் சுசித்ரா மீதுதான் படையெடுத்தார்களா. ஐஸ்வர்யா ராய்க்கு கூட இந்த லக் கிடைத்திருக்காது. சுசித்ரா இப்படி பேசக்கூடாது என அவரது முன்னாள் கணவர் நீதிமன்றத்துக்கு சென்று ஸ்டே வாங்கிய பிறகும் இப்படி பேசுகிறார் என்றால்; கண்டிப்பாக சுசித்ராவுக்குத்தான் தெரபி கொடுக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X