சமந்தா மட்டும்தான் அப்படி செய்தாரா?.. அமலா செய்யவில்லையா?.. சரியான ஈகோ.. வெளுக்கும் பிரபல நடிகை

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்றார்கள். சமந்தாவை பிரிந்த பிறகு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் சைதன்யா. சமந்தா தனது சினிமா கரியரில் கவனம் செலுத்திவருகிறார். விரைவில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை சர்மிளா பேசியிருக்கிறார்.

சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். நாக சைதன்யாவும் அவருக்கு ஃபுல் சப்போர்ட்டே செய்துவந்தார். ஆனால் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்தது சைதன்யாவின் வீட்டுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

samantha naga chaitanya nagarjuna

விவாகரத்து பெற்ற சமந்தா: ஆனால் மாமனார் வீட்டுக்கு பிடிக்கவில்லையென்றாலும் தனது நடிப்பில் தொடர்ந்து பிஸியாக இருந்தார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. விவாகரத்து பற்றி சமந்தாவும் இன்றுவரை வாயை திறக்கவில்லை.

சைதன்யாவின் இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக டேட்டிங், மீட்டிங் என்று இருந்தார்கள். மகனின் இரண்டாவது காதலை தெரிந்துகொண்ட நாகார்ஜுனா உடனடியாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் ராஜஸ்தானில் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரின் சர்ச்சை: இதற்கிடையே தெலங்கானா அமைச்சர் ஒருவர் சமந்தா குறித்து அவதூறாக பேசினார். அதாவது, சமந்தா மீது கேடிஆர் ஆசைப்பட்டதாகவும் அதனால்தான் சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் விவாகரத்து ஏற்பட்டதாகவும் கூறினார். அதற்கு சமந்தா கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் மட்டுமின்றி அவரது முன்னாள் மாமனார் நாகார்ஜுனா, மாமியார் அமலா, முன்னாள் கணவர் நாக சைதன்யா என அனைவருமே கொந்தளித்துவிட்டனர். அவர்கள் மட்டுமின்றி ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோரும் அமைச்சருக்கு எதிராக களத்தில் குதித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

சர்மிளா பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகை சர்மிளா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமந்தா குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "சமந்தா கிளாமர் ரோல் செய்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என்று சொல்கிறார்கள். "திருமணத்துக்கு முன்பேகூட சமந்தா கிளாமர் ரோல் செய்திருக்கிறார்தான். அதனை தெரிந்துதான் அவரை நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார். ஏன் சமந்தா மட்டும்தான் கிளாமர் ரோல் செய்தாரா. நாகார்ஜுனாவின் மனைவி அமலாவும் தான் நடித்தபோது கிளாமர் ரோல் செய்திருக்கிறார்தானே. முக்கியமாக சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒன்றாக வெளியில் சென்றால் சமந்தாவுக்குத்தான் ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். இருவரும் பிரிந்ததற்கு ஈகோ கிளாஷ்தான் காரணம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X