போதை பொருள் வழக்கு… போலீஸ் கிடுக்குபிடி விசாரணை… விழிபிதுங்கும் சிம்பு பட நடிகை !
ஹைதராபாத்: போதை பொருள் வழக்கு விசாரணைக்காக ஆஜரான சார்மி கவுரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல கிடுக்குப்பிடி கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். மேலும், 2015ம் ஆண்டு முதல் இன்று வரையிலான வங்கிப் பரிவர்த்தனை குறித்த முழு விவரத்தையும் போலிசார் சேகரித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஆஜரான இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்மி கவுர்
சிம்புக்கு ஜோடியாக காதல் அழிவதில்லை திரைப்படத்தில் அறிமுகமானவர் சார்மி. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்பு சரியாக இல்லாததால் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது விஜய்தேவரகொண்ட நடிக்கும் லீகர் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

பிரபலங்களிடம் விசாரணை
போதை மருந்து விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளுக்கு தொடர்புள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே, இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், ராணா, நவ்தீப் ரவிதேஜா உள்பட 12 பிரபலங்கள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பிரபலங்களின் எண்
தற்போது, போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட, கெல்வினிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவரது செல்போனில் இருந்து தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள், சிலரது எண்களை கைப்பற்றினர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சார்மியிடம் 8 மணிநேரம் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை 10.30 மணிக்கு ஹைதராபாத் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு நடிகை சார்மி கவுர் ஆஜரானார். இவரிடம் 11 மணிக்கு விசாரணை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை தொடங்கினார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் நேற்று முன் தினம்10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகை சார்மியிடம் கிட்டத்தட்டட 8 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதாக கூறுப்படுகிறது.

கிடுக்குப்பிடி கேள்வி
பூரி ஜெகன்நாத்துக்கும், உங்களுக்கும் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறதா என்றும், கெல்வினுடன் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அவரின் செல்போனில் உங்களின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? எத்தனை ஆண்டுகளாக பழக்கம்? உங்களுடன் யார், யார் போதை பொருளை உபயோகிப்பர்? என பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை சார்மியிடம் கேட்டுள்ளனர். இதற்கு சார்மி அளித்த பதில்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் இன்று வரையிலான வங்கிப் பரிவர்த்தனை பற்றிய முழு விவரத்தையும் சேகரிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீசார் முன்னிலையில்
சார்மியிடம் நான்கு வருடங்களுக்கு முன்பு இதேபோன்றதொரு வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, ஒரு போலீஸ்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.இதனால், சார்மியை பெண் போலீஸ்காரர்களின் மேற்பார்வையில் விசாரணை நடத்திஉ ள்ளனர். போதை பொருள் விவகாரமானது தற்போது தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











