மீண்டும் மன்மதராசா பாட்டுக்கு ஆட்டம் போட்டு பட்டைய கிளப்பிய சாயா சிங்.. அள்ளும் லைக்ஸ்!
சென்னை: மன்மதராசா பாடலுக்கு மீண்டும் ஒரு குத்தாட்டம் போட்டு கிறங்க வைத்துள்ளார் நடிகை சாயா சிங்.
கன்னட மொழி படங்களின் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயா சிங். தமிழில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார் சாயா சிங். அந்தப் படத்தில் இடம் பெற்ற மன்மதராசா பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

பல மொழி படங்கள்
ஃபாஸ்ட் பீட்டான அந்த பாடலுக்கு தனுஷ்க்கு போட்டியாக ஆட்டம் போட்டார் சாயா சிங். இந்த பாடல் ஒன்றாலேயே அவருக்கு அத்தனை பாராட்டுக்கள் குவிந்தன. அதன் பிறகு தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் சாயா சிங்.

சப்போர்ட்டிங் ரோல்
சீரியல் நடிகரான கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன்பிறகு சில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரன் சீரியலிலும் நடித்து வருகிறார் சாயா சிங். தற்போது தமிழரசன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சிவசங்கர் மாஸ்டர்
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி சாயா சிங் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரும்பிய சாயா சிங், மன்மத ராசா பாடலுக்கு நடன இயக்குநரான ஷிவஷங்கர் மாஸ்டருடன் ஆட்டம் போட்டுள்ளார்.

அப்படியே இருக்கீங்களே
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் சாயா சிங். இதனை பார்த்த ரசிகர்கள்.. எவ்வளவு அழகா இருக்கீங்க.. இன்னும் அப்படியே இருக்கீங்களே.. எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது என புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











