தனுஷை அப்படி பார்க்க வேண்டும்.. எனக்கு அதுதான் ஆசை.. நடிகை ஓபன் டாக்
சென்னை: தனுஷின் நடிப்பில் அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. அதேபோல் அவர் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இவை தவிர்த்து அவரிடம் இன்னும் சில படங்களும் இருக்கின்றன. இந்தச் சூழலில் திருடா திருடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயா சிங் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தனுஷ் குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பது என அனைத்து ஜானர்களிலும் கலக்குபவர். அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வந்தது. அவரது 50ஆவது படமான அதனை அவரே இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நல்ல எதிர்பார்ப்போடு வெளியானது படத்துக்கு போதிய வரவேற்பை ரசிகர்கள் கொடுக்கவில்லை. முக்கியமாக கடுமையாக ட்ரோலும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் சிறப்பாக வந்திருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு தானே இயக்கி இட்லி கடை படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
செம பிஸி: அதுமட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் வருகிறது. இதற்கிடையே மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி, போர் தொழில் இயக்குநருடன் ஒரு படம் என படு பிஸியாக இருக்கிறார். மேலும் இளையராஜாவின் பயோபிக் உருவாகவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு இந்தப் படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் வரவில்லை. எனவே இந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதா இல்லை உருவாகுமா என்பது இப்போதுவரை உறுதியாக தெரியவில்லை.
சாயா சிங் பேட்டி: சூழல் இப்படி இருக்க தனுஷுடன் திருடா திருடி படத்தில் நடித்த நடிகை சாயா சிங் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "திருடா திருடி படத்துடைய இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் அதனை இயக்குநர்தானே முடிவு செய்ய வேண்டும். தனுஷை அதே மாதிரியான ரோலில் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இந்தப் படம் டாம் அண்ட் ஜெர்ரியை போல் இருந்ததாக ரசிகர்கள் அப்போது சொல்லியதுண்டு" என்றார்.
சூப்பர் டூப்பர் ஹிட்: முன்னதாக திருடா திருடி படத்தை சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த மன்மத ராசா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தப் படத்தை இயக்கிய சுப்ரமணியம் சிவாதான் பின்நாட்களில் தனுஷுக்கு ரொம்பவே மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் தனுஷ் பற்றிய பல விஷயங்களை தெரிந்துவைத்திருப்பார். தனுஷின் குடும்பத்துடன் நெருங்கி பழகுபவராகவும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











