அக்கடான்னு உடை போட்ட டிடி.. துக்கடான்னு எடை போட வேண்டாம் என கோரிக்கை!
சென்னை : நடிகை டிடி நீலகண்டன் விஜய் டிவியின் முக்கியமான ஆங்கராக இருந்து வருகிறார். பல ஹிட் நடிகர்களை பேட்டி எடுத்து வருகிறார்.
விஜய் டிவியின் பிசியான ஆங்கராக இருந்த இவர், தற்போது அதிகமாக ஆங்கரிங் செய்வதில்லை.
மாறாக முன்னணி நடிகர்களின் படங்கள், அதன் பிரமோஷன்கள் என்றால் உடனடியாக ஆஜராகி அவர்களை சிறப்பாக பேட்டி கண்டு வருகிறார்.

ஆங்கர் டிடி நீலகண்டன்
விஜய் டிவியின் புகழ்பெற்ற ஆங்கர் டிடி நீலகண்டன். திவ்யதர்ஷினி என்ற பெயர் கொண்ட இவரை டிடி என்றே இவர் அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிசியாக காணப்பட்ட டிடி, ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கினார்.

படங்களில் நடிக்கும் டிடி
தற்போது படங்களிலும் நடித்து வருகிறார் டிடி. தனுஷ் இயக்கத்தில் வெளியான ப. பாண்டி படத்தில் இவரது கேரக்டர் சிறிதாக இருந்தாலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தன்னுடைய அம்மாவின் காதலுக்காக மெனக்கெடும் கேரக்டரில் நடித்திருந்தார் டிடி. தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் படத்திலும் வெயிட்டான ரோலில் நடித்து முடித்துள்ளார்.

முன்னணி ஆங்கர்
விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்காவிட்டாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, அந்தப் படத்தின் பிரமோஷனுக்கான பேட்டிகளில் இவர்தான் முன்னணியில் வருவார். முன்னணி நடிகர்களை கலகலப்புடன் வரவேற்று அவர்களின் சொந்த வாழ்க்கை, படம் குறித்த தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் இருந்து கேட்டு பெற்று விடுவார்.

நடிகர்கள் ஆர்வம்
இவரது ஆங்கரிங்கில் இவரது சிரிப்பு கூடுதல் ப்ளஸ். இவருக்கு பேட்டியளிக்கவே முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்போதுதான் தங்களது படங்களுக்கு சிறப்பான பிரமோஷன் கிடைக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார் டிடி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
அவ்வப்போது சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தன்னுடைய வெளிநாட்டு பயணங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

புதிய வீடியோ வெளியீடு
இந்தியன் படத்தில் நடிகை ஊர்மிளா நடிப்பில் வெளியான பாடல் அக்கடான்னு நாங்க உடை போட்டா. சுவர்ணலதா பாடிய இந்தப் பாடல் அந்த காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற பாடல். இப்போதும் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்தப் பாடலை வைத்துத்தான் தற்போது டிடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களிடம் கேள்வி
பேண்ட் -சர்ட்டில் முதலில் தோன்றும் டிடி, இந்தப் பாடலை பின்னணியில் ஓடவிட்டு, மிகவும் மாடர்னான உடைகளில் தோன்றுகிறார். அடுத்தடுத்து மூன்று உடைகளில் தோன்றும் டிடி, எது ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











