மார்கன் பட நடிகை தீப்ஷிகா பரபரப்பு புகார்.. புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதாக சைபர் கிரைமில் முறையீடு!

சென்னை: சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதில் தொடங்கி, மிகவும் மோசமாக சித்தரித்து பகிர்வது, தவறான நோக்கத்திற்காக பகிர்வது, மார்பிங் செய்து பகிர்வது உள்ளிட்டவை நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஐ தொழில் நுட்பம் பல்கிப் பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் நெட்டிசன்கள் பெண்கள் புகைப்படங்களை மிகவும் ஆபாசமாக சித்தரித்து, வீடியோவாக உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகை தீப்ஷிகா தனது புகைப்படங்களை அனுமதி இல்லாமல் இணையத்தில் பயன்படுத்துவதாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் தொடங்கி, விளையாட்டு வீரர்கள், சில நேரங்களில் அரசியல் தலைவர்கள் என பலரது புகைப்படங்களை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அப்படி இருக்கையில் தங்களது அபிமான பிரபலங்களின் புகைப்படங்கள் இருப்பதைப் பார்க்கும் மக்கள் மோசடிக்காரர்களில் வலையில் விழுந்து விடுகிறார்கள்.

Actress Deepashika Chandran Files Cyber Crime Complaint Over Misuse of Her Photos Online
Photo Credit:

தொடர் குற்றங்கள்: இப்படியான குற்றங்கள் ஒரு புறம் நடந்தாலும், மறுபுறம் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நடிகைகள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பகிர்தல், ஆபாசமான வீடியோவாக பகிர்தல் போன்ற வேலைகளிலும் சில மோசடிக்காரர்களும் நெட்டிசன்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு யாராவது தங்களது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால், சைபர் கிரைமிற்கு புகார் அளிக்கச் சொல்லி சைபர் கிரைம் தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடிகை புகார்: இப்படி இருக்கையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் படத்தில் நடித்தவர் நடிகை தீப்ஷிகா சந்திரன். இவர் சைபர் கிரைமில் தற்போது ஒரு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதாவது, தனது புகைப்படங்களை சிலர் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாகவும், சிலர் தனது புகைப்படங்களை முறைகேடாக பகிர்ந்து வருகிறார்கள் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் யாராவது அனுமதி இல்லாமல் பயன்படுத்தினாலும் அவர்கள் மீதும் சைபர் கிரைம் தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X