”தீபிகா படுகோனின் திடீர் இயக்குனர் ஆசை”
மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் நடிகையான தீபிகா படுகோனே திடீர் என்று இயக்குனர் அவதாரம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
பாலிவுட் முழுக்க இதுதான் தற்போது ஹாட் டாப்பிக்.
இந்த ஆசை திடீரென வந்ததாம். விரைவில் இவர் இணை இயக்குநராக முதலில் பணியாற்றுவாராம். பி்ன்னர் இயக்குநர் ஆவாராம்.

ஓம் சாந்தி ஓம் வெற்றி:
இந்தி திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் தீபிகா படுகோனே. இந்தியில் இவரது முதல் படம் "ஓம் சாந்தி ஓம்".இதில் இரட்டை வேடத்தில் கலக்கி இருந்த தீபிகா,இப்படத்திற்காக "பிலிம் பேர்" விருது பெற்றார்.

கோச்சடையான் நாயகி:
அதன்பின்னர் பல படங்களில் வெற்றிக்கதாநாயகியாக வலம் வந்த தீபிகா,தற்போது கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் "கோச்சடையான்" தமிழ் அனிமேஷன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இணை இயக்குனர் தீபிகா:
இந்நிலையில் தீபிகாவிற்கு டைரக்ஷன் ஆசை வந்துள்ளது. இதனால், பாலிவுட்டின் பெண் இயக்குனரான சோயா அக்தர் பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாக வைத்து இயக்க உள்ள படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற கேட்டுள்ளாராம் தீபிகா.

தமிழில் அஜித்துடன் ஜோடியா?:
இவரது ஆசை நிறைவேறினால் பாலிவுட்க்கு ஒரு அழகான பெண் இயக்குனர் கிடைப்பார்.இந்நிலையில், அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்க போகும் தமிழ் படம் ஒன்றில் தீபிகா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











