Iniya: ஹீரோயின் மெட்டீரியல்...அழகில் அம்மாவை மிஞ்சிய தேவயானி மகள் இனியா!

சென்னை: நடிகை தேவயானியின் மகள் இனியா இணையத்தில் படு ஆக்டிவாக உள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகை தேவயானி 'தொட்டாச்சிணுங்கி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

devayani iniya photo
Photo Credit:

நடிகை தேவயானி: அதில் மூத்த மகளான இனியா, ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய திறமையால், வசீகரமான குரல் வளத்தால் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சரிகமபாவில் அடுத்தடுத்த கடத்தில் திறம்பட பாடி வந்த இனியா, நிச்சயமாக டைட்டிலை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இறுதி வாய்ப்பு இனியா தவறவிட்டார்.

அழகில் அம்மாவிற்கே டஃப் : இனியா சரிகமபா நிகழ்ச்சியில் பாட ஆரம்பித்த பிறகு, தனியாக இன்ஸ்டாகிராமில் பக்கத்தை தொடங்கி அதில், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இனியா, லைட் கோல்டு கலர் புடவை அணிந்து அதற்கு ஏற்றால் போல காதுக்கு குண்டு ஜிமிக்கி போட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவில் இனியாவின் கன்னக்குழி (Dimple) அழகாக எடுப்பாக தெரிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்க ஹீரோயின் மெட்டீரியல் என்றும், அழகில் அம்மாவிற்கே டஃப் கொடுத்து விட்டீங்க என புகழ்ந்து வருகிறார்கள்.

தேவயானியின் மகள் இனியா, தெலுங்கு இயக்குநர் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் சாய் குமார் நடிப்பில் வெளியான 'கோர்ட்' என்றிக திரைப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை தியாகராஜன் வாங்கி உள்ளார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தேவயானியின் மகள் இனியா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாக வில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X