தேவயானி தான் காரணம்.. மகள் இனியா படுவதை ரசித்த ராஜகுமாரன் உருக்கம்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக சரிகமப நிகழ்ச்சி உள்ளது. அண்மையில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 ஒளிபரப்பாகி வந்தது. அண்மையில் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, மே 24-ம் தேதி முதல் சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இதில், நடிகை தேவயாணியின் மூத்த மகள் இனியா கலந்து கொண்டு, பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இதில், நடுவர்களாக இருந்த அனைவரும் கண்ணை கட்டிக்கொண்டு இனியா பாடலை கேட்டு அவரை தேர்வு செய்தனர். அதன் பிறகு தான், அது தேவயாணியின் மகள் என தெரிந்தது. மகள் பாடியதை கேட்டு தேவயாணி கண் கலங்கினார்.

saregamapa devayani Zee tamil
Photo Credit:

கண்கலங்கிய தேவயானி: பல கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியா நன்றாய அடுத்தடுத்த கட்டத்திற்கு வந்துள்ளார். மகள் பாடுவதை பார்த்து கண்கலங்கிய ராஜகுமாரன், இனியா பாடுவதை கேட்கும் போது தான் ஏதோ சாதித்த மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. இது எல்லாத்திற்கும் காரணம் நான் இல்லை, என் மனைவி தேவயானி தான். அவள் தான் குழந்தைகளை நன்றாக கவனித்து அவர்களின் திறமையை வெளியில் கொண்டு வந்த கடுமையாக உழைத்தார் என்று உருக்கமாக பேசினார். இதையடுத்து பேசிய தேவயானி, என் அம்மா எனக்கு எப்படி எல்லாம் சப்போர்ட் செய்தார்களோ அதே போல, நானும் என் மகளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார். அம்மா பேசியதை கேட்ட மகள் இனியா உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

காதல் திருமணம்: நடிகை தேவயானி சரத்குமாரின் சூர்யவம்சம் படத்தில் நடித்த போது உதவி இயக்குநராக இருந்தார் ராஜகுமாரன்.அதன் பின் நீ வருவாயென மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் நீ வருவாயென, விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர் மீது எப்படி காதல் வந்தது என்பதை தேவயானி பல பேட்டியில் கூறியுள்ளார். நீ வருவாயென படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும், மனதை தொடும் வகையில் இருக்கும் காட்சியும் அப்படித்தான் இருக்கும். அதைப்பார்த்து இவர் மேல எனக்கு தனி மரியாதை வந்தது.

24 ஆண்டு கால வாழ்க்கை: அதன் பின் அவர் என்னிடம் காதலை சொன்ன போது, நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஆனால், இந்த காதலை பெற்றோர் ஏற்கவில்லை. திருமணத்திற்கு பின் இரண்டு மக பிறக்கும் வரை நாங்க இரண்டு பேரும் தனியாகத்தான் அனைத்தையும் கவனித்துக்கொண்டோம் என்றார். இவர்களின் திருமணத்தின் போது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அத்தனை சர்ச்சைகளையும் முறியடித்து 24 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திருமண வாழ்வில் ரோல் மாடலாக இந்த ஜோடி வலம் வருகின்றனர். தனது இரண்டு மகள்களை கண்ணும் கருத்துவமாக வளர்த்துள்ளார். இனியா பாடகியாகி இருக்கும் நிலையில், விரைவில் மூத்த மகள் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X