மகளின் ஆசையை நிறைவேற்றிய தேவயானி.. அம்மா பெயரை காப்பாற்றுவாரா பிரியங்கா? பிரசாந்த் படத்தில் அறிமுகம்
சென்னை: நடிகை தேவயானியின் மூத்த மகள் இனியா பாடகியாக ஜொலித்துக்கொண்டு இருக்க, இளைய மகள் பிரியங்கா சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். நடிப்பின் மீது ஈடுபாடு கொண்ட இவர் தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
'தொட்டாச்சிணுங்கி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தேவயானி 'காதல் கோட்டை' வெற்றிக்கு பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி 'நீ வருவாய் என' என்ற படத்தில் நடித்த போது, ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிரியங்கா ராஜகுமாரன்: இத்தனை ஆண்டுகளாக மீடியாவின் வெளிச்சம் மகள்களின் மீது படாமல் தனது இரண்டு மகள்களையும் வளர்ந்து வந்தார் தேவயானி. கடந்த ஆண்டு தேவயானியின் மூத்த மகள் இனியா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இனியா, டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் கடைசி வரை சிறப்பாக பாடினார். தேவயானி நினைத்து இருந்தால் பெரிய இசைப்பாளரிடம் சிபாரிசு செய்து தனது மகளை பாடகியாக்கி இருக்கலாம். ஆனால், கஷ்டப்பட்டு அந்த இடத்தை மகள் பெற வேண்டும் என நினைத்த தேவயானி, தனது மகளை தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார்.
சினிமாவில் அறிமுகம்: தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு சினிமாவில் ஈடுபாடு இருப்பதாக பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார். அதன்படி தற்போது பிரியங்கா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். நடிகர் பிரசாந்தின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தேவயானி தனது மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற "Court: State vs a Nobody" படம் 'ரஞ்சன் தி அட்வகேட்' என்கிற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அந்த படத்தில் தான் தேவயானியின் மகள் பிரியங்கா அறிமுகமாக உள்ளார். கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் பிரியங்காவிற்கு தற்போது 18வயதாகிறது. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











