அட்ஜஸ்ட்மென்ட் பெரிய தொல்லை.. யாராவது அணுகினால் அவ்வளவுதான்.. விட்டு விளாசிய நடிகை

சென்னை: சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது நடிகைகளுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது. அதுகுறித்து பல நடிகைகள் ஓபனாக பேசிவருகிறார்கள். அது ஒருவகையில் ஆரோக்கியமானதும்கூட. இருந்தாலும் அந்த தொந்தரவு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்த தேவி பிரியா அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சினிமா என்றாலே ஆண்கள் கோலோச்சும் துறை என்ற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இயக்கம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் கோலோச்ச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கு இருக்கும் ஒரே தொந்தரவு என்றால் அட்ஜஸ்ட்மென்ட் தான். இதன் காரணமாகவே பலரும் நடிப்பு துறையை தேர்ந்தெடுக்க அஞ்சுகிறார்கள். இல்லை அவர்களது குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள். பலரும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள்.

Actress Devi Priya Open Talks about Adjustment Issue in Cinema Industry

பெரிய நடிகைகளுக்கே அந்த நிலைமைதான்: வளர்ந்துவரும் நடிகைகளுக்கோ அல்லது அறிமுகமாகும் நடிகைக்களுக்குத்தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருக்கிறதா என்றால் அவர்களுக்கு மட்டும் இல்லை. வாரிசு நடிகைகளுக்கும், பெரிய நடிகைகளுக்குமே அவர்களது ஆரம்பகாலத்தில் அது இருந்திருக்கிறது. சரத்குமார் மகள் வரலட்சுமி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்டோரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் அப்ரோச் சென்றிருக்கிறது. அதனை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.

தேவி பிரியா பேட்டி: அதுகுறித்து அவர்களும் ஓபனாகவே பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த தேவி பிரியா அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "பெங்களூரிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒருவர் ரொம்பவே டீசண்ட்டாக ஆங்கிலத்தில் பேசினார். அப்போது அவர், பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. உங்களால் வர முடியுமா என்று கேட்டார்.

இரவு விருந்தில் பங்கேற்க வேண்டும்: அதற்கு நான் நிகழ்ச்சி நடக்கும் நாள் என்று; அன்று வருகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்றுவிடுவேன் என சொன்னேன். அவரோ என்னிடம், நீங்கள் இரவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று சொன்னார். நான் என்னால் அதெல்லாம் முடியாது என்று மறுத்தேன். அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் என்னை அழைத்தார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்.

சிறு ரோலுக்குக்கூட அட்ஜஸ்ட்மென்ட்: சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடிப்பதற்குக்கூட பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. எல்லா ஆடிஷனும் முடிந்த பிறகு அட்ஜஸ்ட்மென்ட் என்பது கடைசி ஆப்ஷனாக இருக்கும். அதை க்ளிக் செய்தால் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்ற நிலை இருக்கும். ஒரு படத்தில் அறிமுகமாகிவிட்டு அடுத்த பட வாய்ப்பை தேடும் நடிகைகளுக்கு இது அதிகம் நடக்கும். இந்தத் தொல்லையால்தான் பல நடிகைகள் சீக்கிரமே திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுகிறார்கள். எனக்கு இதுவரை இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது இல்லை. அப்படி யாராவது என்னை அணுகினால் நான் அந்தப் படத்தில் நடிக்கமாட்டேன். அவ்வளவுதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X