Dhanshika: என் 16 வருட உழைப்பு.. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்.. தன்ஷிகா பேட்டி!
சென்னை: நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வருகிறார். இவர்கள் காதல் விஷயம் அண்மையில் சினிமா உலகத்திற்கு தெரிய வந்தது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 29ந் தேதி நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று சாய் தன்ஷிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
45 வயதை கடந்த நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தேன். தற்போது, அந்த வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 15ந் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதன் பிறகு ஆகஸ்ட் 29ந் தேதி என்னுடைய பிறந்த நாளில், தனது காதல் குறித்தும், திருமணம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன் என நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். விஷால் காதலிப்பதாக கூறியதும், இணையத்தில் பலர், விஷால் காதலிக்கும் பெண் யார்.. அவர் நடிகையா என ஆராய்ச்சி செய்தனர்.

விஷால் திருமணம்: நடிகை சாய் தன்ஷிகா நடித்த 'யோகி டா' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் தன்ஷியா, நானும் விஷாலும் காதலிக்கிறோம். இந்த மேடை திருமண அறிவிப்பு மேடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் விஷாலும் 15 வருட நண்பர்கள், இதற்கு மேல் மறைக்க முடியாது, நடிகர் சங்க கட்டிடம் ஆகஸ்ட் 15ந் தேதி திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் பின் ஆகஸ்ட் 29ந் தேதி விஷாலின் பிறந்த நாள் அன்று திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் விஷால் மற்றும் தன்ஷிகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தொடர்ந்து நடிப்பேன்: இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தன்ஷிகா, திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். எனக்கு தெரிந்த வேலை நடிப்பது மட்டும் தான். சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கான 16 வருடமாக உழைத்து இருக்கிறேன். சினிமா என்பது என்னுடைய பேஷன், இதனால், படத்தில் தொடர்ந்து நடிப்பேன், இதைத்தாண்டி வேறு எதையும் நான் யோசிக்கவில்லை என்று தன்ஷிகா கூறியுள்ளார். ரவி மோகன் நடித்த பேராண்மை திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்த தன்ஷிகா, அந்த படத்தை தொடர்ந்து பரதேசி, கபாலி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











