தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தெய்வகுழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய தர்ஷா குப்தா!

சென்னை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பிரபலமான தர்ஷா, அதைப்பயன்படுத்தி படவாய்ப்பை பெற்று வருகிறார். இவர் நடித்துள்ள தலைமை செயலகம் வெப் தொடர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தனது பிறந்த நாளான இன்று நடிகை தர்ஷா குப்தா ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வகை வகையாக சமைத்தார். இதைத்தொடர்ந்து, ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தர்ஷா குப்தாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு வரவில்லை.

Actress Dharsha gupta birthday photos

நடிகை தர்ஷா குப்தா: சினிமாவில் தர்ஷா: சன்னி லியோன் லீட் கேரக்டரில் நடித்திருந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் வந்த சுவடே தெரியாமல், ஊத்தி கவுத்துக்கொண்டது. தற்போது இவர், வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட நடித்த தலைமைச் செயலகம் வெப் சீரிஸில் பரத்துக்கு ஜோடியாக காவல்துறை அதிகாரியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த வெப் தொடரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Actress Dharsha gupta birthday photos

இணையத்தில் ஆக்டிவ்: இன்ஸ்டாகிராமில், 22 லட்சம் பாலோவர்களை வைத்து இருக்கும் தர்ஷா குப்தா,புகைப்படங்கள், ரீல்ஸ் போன்றவை அதிகமான வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் 22 லட்சம் பாலோவர்களை வைத்திருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் எந்த அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சேலை அணிந்தால் கூட அதில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். அவருடைய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும்.

Actress Dharsha gupta birthday photos

அனைவரும் தாயே: இந்நிலையில், நடிகை தர்ஷா குப்தா, தனது பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடி உள்ளார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இவர், தாயில்லா இந்த குழந்தைகளுக்கு அனைவரும் தாயே, இன்று என் பிறந்த நாளை முன்னிட்டு தெய்வகுழந்தைகளுடன் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் இவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். கொரோனா காலத்தில் பசியால் வாடியவர்களை தேடி தேடி உணவு பொட்டலங்களை கொடுத்த தர்ஷா குப்தா, உலக பட்டினி தினத்தில் நலிந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வழங்கி மகிழ்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X