அய்யோ.. வேற லெவல்ங்க நீங்க.. மாராப்பை நழுவ விட்டு.. அஜித் பாடலுக்கு அட்டகாச டான்ஸ் ஆடிய தர்ஷா!
சென்னை: நடிகை தர்ஷா குப்தா சேலையில வீடு கட்டவா பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பிரபல மாடல் தர்ஷா குப்தா. 26 வயதான தர்ஷா குப்தாதான் தற்போது இளசுகளின் ட்ரீம் கேர்ள்.
முன்னணி மாடலாக மட்டுமின்றி சீரியல் நடிகையாகவும் வலம் வருகிறார். அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

போட்டோக்கள்
தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை தர்ஷா குப்தா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஃபாலோயர்கள்
அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் ரசிக்க வேண்டும் என்பதற்காக மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். சேலை மாடர்ன் டிரெஸ் என கலக்கி வரும் தர்ஷா வழக்கமாக போட்டோக்களை ஷேர் செய்வார்.

செம காம்பினேஷன்
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அந்த இரண்டு வீடியோக்களிலுமே அட்டகாசமாய் டான்ஸ் ஆடியிருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா. மஞ்சள் நிற சேலை கறுப்பு நிற பிளவுஸ் காம்பினேஷனில் செம லுக்கில் இருக்கிறார் தர்ஷா.

செம க்யூட்
சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து கிறங்க வைத்துள்ளார். தர்ஷா குப்தாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் சூப்பர்ப் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

தாவணி நழுவினால்
அடுத்து அஜித்தின் சேலையில வீடு கட்டவா என்ற பாடலுக்கும் செம கிளாமராய் ஆட்டம் போட்டுள்ளார். தாவணி நழுவினால் இதயம் நழுவுதே என்ற வரிக்கு ஏற்ப மாராப்பை நழுவ விட்டு அனலை கிளப்பியிருக்கிறார்.
Recommended Video

கேரட் அல்வா..
அவரது இந்த டான்ஸை பார்த்த நெட்டிசன்கள் அய்யோ வேற லெவல்ங்க நீங்க என்றும்.. கேரட் அல்வா மாதிரி இருக்கீங்களே என ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் பல நெட்டிசன்கள் எனக்கு பிடித்த மாடல் நீங்கள்தான் என கன்னாபின்னாவென ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











