வீடியோ காலுக்கு 6000? சொந்தமாக ஆப் தொடங்கிய தர்ஷா குப்தா.. ரேட் கார்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

சென்னை: சின்னத்திரையில் அறிமுகமாகி, சமூக வலைதளங்களில் தனது மிதமிஞ்சிய கவர்ச்சியால் இளசுகளின் மனதைக் கொள்ளையடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' சீரியலில் புடவை கட்டி, தலைநிறைய பூ வைத்து குடும்பப் பெண்ணாக அறிமுகமானாலும், இன்ஸ்டாகிராமில் இவர் காட்டிய கிளாமர் அவதாரம் வேறு மாதிரி இருந்தது.

இன்ஸ்டாவில் கிடைத்த புகழை வைத்து விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' மற்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இவரது கவர்ச்சி எடுபடாமல் போன வேகத்திலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் மூலம் பெரிய இடத்திற்குச் சென்று கோடிகளில் சம்பாதிக்கலாம் என நினைத்த தர்ஷா குப்தாவின் கனவு பளிக்காமல் போனது.

Dharsha Gupta instagram photo
Photo Credit:

கல்லாகட்டும் கவர்ச்சிப் புயல்: இருப்பினும் துளியும் மனம் தளராத தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் முன்பை விட எல்லைமீறிய கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவிடத் தொடங்கினார். இன்ஸ்டாகிராம் 'Exclusive Subscriber' வசதி மூலம் மாதம் ₹399 கட்டணத்தில் பிரத்யேகப் புகைப்படங்களைப் பகிர்ந்தார். இதன் மூலம் மட்டுமே மாதம் சுமார் ₹3.67 லட்சம் வரை சம்பாதித்தார்.

சொந்தமாக ஆப்: இன்ஸ்டாவில் சின்னச் சின்னதாக கவர்ச்சி காட்டி அலுத்துப் போன தர்ஷா குப்தா, தற்போது ஒரு படி மேலே போய் தனது பெயரிலேயே புதிதாக ஒரு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த ஆப்பில் அவர் போட்டுள்ள ரேட் கார்டைப் பார்த்து இணையவாசிகள் வாயை பிளந்துள்ளனர். பிறந்தநாளுக்கு வீடியோ காலில் வாழ்த்து சொல்ல ஆறு ஆயிரம், பிராண்ட் புரமோஷனும் ரூ50,000, ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ1,000, இது தவிர, 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும், அதற்குச் சலுகை ஆஃபர்களும் வழங்கி உள்ளார்.

Dharsha Gupta instagram photo
Photo Credit:

கண்டு கொள்ளாத தர்ஷா: இந்த கட்டணப் பட்டியலை பார்த்த இணையவாசிகள் இதெல்லாம் ஒரு பொழப்பா... காசுக்காக இப்படியா இறங்குவது? என கண்டபடி கழுவி ஊற்றி வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத தர்ஷா குப்தா, யார் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்க, எனக்குக் காசு வந்தால் போதும் என்ற மைண்ட் செட்டில் தனது புது ஆப் பிசினஸை கெத்தாக நடத்தி வருகிறார். தர்ஷா குப்தாவின் இந்த அதிரடி ஆப் விவகாரம் தான் தற்போது இணையத்தில் செம்ம ஹாட் டாபிக்காக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X