வெஸ்டர்னா இருந்த என்ன ஹோம்லியா மாத்திட்டாங்களே.. தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்!

சென்னை: அழகான வளைவு நெளிவுகளை கொண்ட நடிகை தர்ஷா குப்தாவிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்க தினம் தினம் புதுப்புது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கோவையிலிருந்து கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக சென்னை வந்த தர்ஷா குப்தாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரைப் பக்கம் சென்றார்.

actress dharsha gupta homely look photos trending on social media

இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியலில் லீட்ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை தர்ஷா குப்தா: அந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்துப்போனதால், விஜய் டிவி சீரியலில் அவளும் நானும், செந்தூரப்பூவே, சில சீரியல்களில் நடித்து வந்தார். இதன்பின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கோமாளி புகழுடன் சேர்ந்து அலப்பறை செய்து இருந்தார்.

ருத்ர தாண்டவம்: இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். அதோடு, மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்கிற படத்தின் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஆனால், முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, சதீஷூடன் இணைந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் பிளாப் ஆனது. தற்போது இவர் யோகி பாபுவிற்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கல் படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவ்: தர்ஷாவுக்கு சினிமாவில் எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்காததால், தனது பளிங்குமேனியை வளைத்து வளைத்து காண்பித்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். சினிமாவில் நுழைவதற்காக கொழுக் மொழுக் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு.

சூப்பர் கேப்ஷன்: அந்த வகையில், வழக்கமாக கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் நடிகை தர்ஷா குப்தா திடீரென குடும்ப குத்துவிளக்குப் போல, சுடிதார் அணிந்து கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக முயற்சியை விதைத்துக் கொண்டே இருங்கள் முளைத்தால் விருட்சமாகட்டும் இல்லையேல் உரமாகட்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் உங்களை ரசிப்பதா இல்லை உங்களது சிரிப்பை ரசிப்பதா இல்லை உங்களது கண்களை ரசிப்பதா இல்லை உங்களது மொத்த அழகையும் ரசிப்பதா என, தர்ஷா குப்தாவின் அழகை வர்ணித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X