கொளுத்தும் வெயிலுக்கு கூலாக நடிகை தர்ஷா குப்தா.. குளு குளு ஹாட் புகைப்படம் இதோ!

சென்னை: நடிகை தர்ஷா குப்தா, அடிக்கிற வெயிலுக்கு இதுதான் ஏத்த உடை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பட்டமாக தனது அழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். அவரின் இந்த போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Actress dharsha gupta latest Glamours photoshoots

நடிகை தர்ஷா குப்தா: கோயம்புத்தூரில் பிறந்த தர்ஷா குப்தா, கல்லூரியில் படிக்கும் போதே, மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால், சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பிறகே நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியல்களில்தான். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த முள்ளும் மலரும் சீரியல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

ரசிகர்கள் மனதில் இடம்: இதைத்தொடர்ந்து, மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும், விஜய் டிவியில் சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர், கே.பி.ஒய் காமெடி திருவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கெஸ்டாக பங்கேற்றார். விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அசத்தினார்.

Actress dharsha gupta latest Glamours photoshoots

ருத்ரதாண்டவம்: மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தாலும், அதன்பிறகு அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ருத்ரதாண்டவம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான எஃப்ஏபி விருதை வென்றிருந்தார். அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது. தற்போது, யோகி பாபுவிற்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்: படவாய்ப்பு இல்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தனது ரசிகர்களை வளைத்துப்போட்டு வைத்திருக்கும் தர்ஷா குப்தா, தற்போது, பளபளப்புக்கும் தனது பளிங்கு மேனியை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். அந்த போட்டோ போட்டோவிற்கு கேப்ஷனாக Too glam to give a damn.. Happy Weekend என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X