Dharsha Gupta: அடடா அல்வா துண்டு இடுப்பு.. புடவையில் ரசிகர்களை கிறங்க வைத்த தர்ஷா குப்தா!
சென்னை: சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் போனவர்தான் இந்த தர்ஷா குப்தா. நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இவருக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால், துவண்டு போகாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். தற்போது இவர், அல்வா துண்டு போல இருக்கும் இடையை காட்டி இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சீரியலில் தான், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த முள்ளும் மலரும் சீரியலில், எட்டு முழப்புடவையை சுற்றிக்கொண்டு, குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த சீரியலில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றதால், மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவி குக் வித் கோமாளிக்கு இவரை அழைத்தது. அதில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் எனக்கு கவர்ச்சி மட்டுமில்ல,சமைக்கவும் வரும் என்பதை நிரூபித்தார்.அது மட்டுமில்லாமல் புகழுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த அட்டகாசத்தை ரசிகர்கள் ரசித்தனர். இதனால், தர்ஷா குப்தாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தர்ஷா குப்தாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சர்ச்சை இயக்குநர் என்று பெயர் எடுத்த மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் ரிஷியின் மனைவியாக நடித்தார்.

சினிமாவில் பிஸி: இந்த படத்தை தொடர்ந்து ஓமை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த படத்தில் சன்னி லியோன், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்துள்ளார். கோவையில் இருந்து வந்த தர்ஷா, எப்படி வந்திருக்கிறார் பாருங்கள் என்று நகைச்சுவையாக பேசுகிறேன் என்று ஏதோ பேச போக அது சர்ச்சையாகி விட்டது. இப்படி சர்ச்சைக்கு மத்தியில் ஓமை கோஸ்ட் படம் வெளியான போதும், படத்தில் கதை என்று சொல்லும் அளவிற்கு ஒன்றுமே இல்லாததால் படம் ஓடவே இல்லை.

தற்போது தர்ஷா குப்தா, யோகி பாபு லீட் ரோலில் நடித்து வரும் மெடிக்கல் மிராக்கல் படத்தில் நடித்து வருகிறார். ஏ1, பாரிஸ் ஜெயராஜ் என சந்தானத்தின் வெற்றி படங்களை இயக்கி ஜான்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில், சேசு, மன்சூர் அலி கான், மதுரை முத்து ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
அடடா அல்வாத்துண்டு இடுப்பு: சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா, தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள், போட்டோஷுட்களை இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஃபுல் எனர்ஜியோடு இருக்கிறார். தற்போது இவர், அல்வா துண்டுபோல இருக்கும் தனது சிறுத்த இடையை காட்டி நிற்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர் அடடா அடடா அல்வா துண்டு இடுப்பு என்று கவிதைபாடி வருகின்றனர். இணையத்தில் இவர் அப்லோடு செய்யும் போட்டோவிற்கு ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











