Dharsha: பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கிய தர்ஷா குப்தா.. அட எம்புட்டு அழகு!

சென்னை: நடிகை தர்ஷா குப்தா பெங்களூரில் டீச்சராக பணிபுரிந்த நிலையில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தில் மாடலிங்கில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தொடர்ந்து விஜய் டிவியின் செந்தூரப்பூவே, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்த நிலையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனாலும் போட்டோஷுட்கள் மூலமே இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் தீம் பேசில் இவரது போட்டோஷுட்கள் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்துள்ளார் தர்ஷா குப்தா.

television dharsha gupta bigg boss tamil 8

நடிகை தர்ஷா குப்தா: நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த 8வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய தர்ஷா குப்தா மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார்.. ஆனால் எதிர்பார்த்தபடி இல்லாமல் அவர் கடந்த அக்டோபர் இறுதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில் ஏறக்குறைய 5 லட்சம் ரூபாய் இவருக்கு மொத்தமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதிரடி போட்டோஷுட்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமும் ரசிகர்களை கவர்ந்திருந்தார் தர்ஷா குப்தா. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய தர்ஷா குப்தா, முன்னதாக பெங்களூரில் டீச்சராகவும் பணியாற்றியுள்ளார். சினிமா மீது கொண்ட ஆசையால் இவர் மாடலிங்கில் நுழைந்து தொடர்ந்து அடுத்தடுத்து செந்தூரப்பூவே, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் களமிறங்கி ரசிகர்களை கவர்ந்திருந்தார். அடுத்தடுத்த போட்டோஷுட்கள் மூலமாக இவர் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை மிகப்பெரியதாக மாற்றினார். தீம் பேசில் இவரது போட்டோஷுட்கள் ஏராளமான ரசிகர்களை கொண்டாட செய்தன.

television dharsha gupta bigg boss tamil 8

எலிமினேட் ஆன தர்ஷா குப்தா: இவையே இவருக்கு சீரியலில் வாய்ப்புகளையும் பெற்று தந்திருந்தன. இந்நிலையில் அடுத்தடுத்து குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ள தர்ஷா குப்தா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன நிலையில், மீண்டும் போட்டோ சூட் எடுப்பதில் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார். அவரது அடுத்தடுத்த போட்டோசூட்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்ளை பெற்று வருகின்றன. இவற்றில் மிகவும் க்யூட்டாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா. வழக்கம் போல இந்த புகைப்படங்களில் கவர்ச்சியை மிக்ஸ் செய்ய அவர் தவறவில்லை.

அடுத்தடுத்த போட்டோஷுட்கள்: நிகழ்ச்சிகள், போட்டோஷுட்கள் என அதிரடியாக அடுத்தடுத்து களமிறங்கி வரும் தர்ஷா குப்தாவிற்கு சினிமாவிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கதவை தட்டி வருகின்றன. முன்னதாக மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக நடித்திருந்த தர்ஷா குப்தா, தொடர்ந்து சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியிலும் அவர் சிறப்பாக செயல்படாத நிலையில் தற்போது அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

television dharsha gupta bigg boss tamil 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X