Dharsha gupta: தாமரைப்பூவுடன் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு தாவியவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். ருத்ரதாண்டவம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்துவரும் தர்ஷா குப்தா தாமரைப்பூவை கையில் வைத்துக்கொண்டு க்யூட்டாக வாழ்த்து சொல்லி உள்ளார்.
நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தர்ஷா குப்தாவிற்கு சிறந்த என்ட்ரியை கொடுத்தது.

சினிமாவில் தர்ஷா: தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா, சன்னி லியோன் லீட் கேரக்டரில் நடித்திருந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சி மட்டுமே போதாது என்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த காட்சியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

22 லட்சம் பாலோவர்கள்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் தர்ஷா குப்தா, குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள், ரீல்ஸ் போன்றவை அதிகமான வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் 22 லட்சம் பாலோவர்களை வைத்து இருக்கும் தர்ஷா குப்தா.


புத்தாண்டு வாழ்த்து: தமிழ் புத்தாண்டுக்கு பாரம்பரிய முறைப்படி புடவை கட்டிக்கொண்டு, கையில் தாமரைப்பூவை வைத்துக்கொண்டு க்யூட்டாக வாழ்த்து சொல்லி உள்ளார். தமிழ் மீது அதிக ஈடுபாடு கொண்ட தர்ஷா குப்தா, தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் நிறை செல்வமும் நீடித்த வாழ்வும் அமையட்டும்... தமிழில் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











