Dharsha Gupta: காலை தூக்கி மேல வச்சு..எக்குத்தப்பாக போஸ் கொடுத்த நடிகை!
சென்னை: நடிகைகள் பலரும் புதுசு புதுசாக ரசிகர்களை கவர்வதற்கு ஒவ்வொன்றாக பண்ணிக் கொண்டிருக்கும் போது நடிகை தர்ஷா குப்தா அவருடைய ரசிகர்களின் மனதினை நன்றாக தெரிந்து கொண்டு தினம் தினம் ஒவ்வொரு வீடியோ மற்றும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியில் வைத்து இருக்கிறார்.
கோலிவுட்டில் திறமையை காட்டி பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தர்ஷா குப்தா.சினிமா கனவோடு சென்னை வந்த தர்ஷா குப்தா சின்னத்திரை பக்கம் சென்று சீரியலில் திறமை காட்டினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் அறிமுகமான தர்ஷா குப்தா. அதன்பிறகு விஜய்தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வகை வகையாக சமைத்தார். அண்மையில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளாதது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இரண்டு படமும் தோல்வி: சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போட்டு காத்திருந்த தர்ஷா குப்தாவிற்கு ஒன்றுமே நடக்காததால், ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி தீவிரமாக அலைந்தார். அப்போது மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி படமாக அமைந்தால், அம்மணி மிகவும் அப்செட்டானார். தற்போது, இவர் யோகி பாபுவிற்கு ஜோடியாக மெடிக்கிள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குவியும் லைக்குகள்: சினிமாவில் ஒரு நடிகையாக வரவேண்டும் என்றால், கவர்ச்சி காட்டினால்தான் முடியும் என்பதை நன்கு தெரிந்து கொண்ட தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சியில் விதவிதமான போட்டோஷூட்களை பகிர்ந்து அலப்பறை கொடுத்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்ணில் படாதா என்கிற ஏக்கத்துடன் இருக்கிறார். அந்த வகையில், ஊஞ்சலின் கம்பியில் சாய்ந்து கொண்டு, சிவப்பு நிற புடவையில், தூக்கலான கவர்ச்சியுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக வெற்றி இறுதியானது அல்ல, தோல்வி மரணம் அல்ல, தொடரும் துணிவுதான் முக்கியம் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை அவர் ஷேர் செய்த சிறிது நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











