Dharsha :மயிலிறகு போன்ற புடவையில் ரசிகர்களை வருடிவிட்ட தர்ஷா குப்தா.. வேற லெவல் போட்டோஸ்!

சென்னை : நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு சென்றவர்களில் ஒருவர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

முன்னதாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

Actress Dharsha Guptas latest photoshoot pictures gets fans more likes

தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் : நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்களில் முக்கியமானவர். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். முன்னதாக செந்தூரப்பூவே தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்ததாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. புகழ் உள்ளிட்டவர்களுடன் இவர் இந்த நிகழ்ச்சியில் அடித்த லூட்டி, ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இதையடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதைவிட்டு விட்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் சதீஷிற்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்திருந்தார். முன்னதாக ருத்ரதாண்டவம் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Actress Dharsha Guptas latest photoshoot pictures gets fans more likes

சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிசியாக பல்வேறு போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் தர்ஷா குப்தா. தொடர்ந்து வித்தியாசமான கான்செப்டிலும் இவர் போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிட்ட நிலையில், இவரது புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவரை தற்போது 22 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து புடவை மற்றும் பாரம்பரிய உடைகளில் மட்டுமில்லாமல், மாடர்ன் ட்ரஸ்ஸிலும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா. தற்போது புடவையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளன. தொடர்ந்து இவர் தினந்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் படவாய்ப்புகளையும் ஈர்த்து வருகிறார்.

Actress Dharsha Guptas latest photoshoot pictures gets fans more likes

நடிகை தர்ஷா குப்தா சமீபத்தில் தன்னுடைய பிரேக்கப்பான காதல் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தான் பிரேக் அப் செய்த காதலன், தற்போதுவரை தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் ஒருமுறை ஒருவர்மீது வைக்கும் நம்பிக்கை போய் விட்டால் , அவர்களுடன் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். ஒருவர் உண்மையாக இல்லாவிட்டால் கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருடன் வாழ முடியாது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X