அழகான கூலர்சுடன் கூல் பேபி தர்ஷா குப்தா.. மேகம் கருக்காதா பாடலுக்கு க்யூட் பர்பாமென்ஸ்!

சென்னை : நடிகை தர்ஷா குப்தா மாடலிங், சீரியல், படங்கள் என அடுத்தடுத்த களங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் தர்ஷா குப்தா. தொடர்ந்து சிறப்பான பாடல்களுக்கு இவர் சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவர் கொடுத்துள்ள பர்பாமென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய கல்லூரி காலகட்டத்திலேயே மாடலிங்கில் ஈடுபட்டு அதன்மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றவர். தொடர்ந்து முள்ளும் மலரும், செந்தூரப் பூவே போன்ற சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் இந்தத் தொடர்கள் ஒளிபரப்பாகின.

சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த தர்ஷா

சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த தர்ஷா

சீரியல்களில் நடித்துவந்த இவர் குக் வித் கோமாளி சீசன் 2வில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். ஆனால் அதை இறுதி வரை நிலைக்காமல் இடையிலேயே வெளியேறினார். ஆனாலும் இந்த நிகழ்ச்சியும் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தன்னுடைய அழகான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

படங்களில் நடிக்கும் வாய்ப்பு

படங்களில் நடிக்கும் வாய்ப்பு

சீரியல்கள், குக் வித் கோமாளி என அடுத்தடுத்து தன்னை பிசியாக வைத்துக் கொண்ட தர்ஷா குப்தாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ருத்ர தாண்டவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். விரைவில் துவங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் தர்ஷா குப்தா. இவரை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கு அதிகமான பாலோயர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்த ராதை, சீதா என வித்தியாசமான கான்செப்ட்களில் இவர் போட்டோஷுட் எடுத்து அதை பகிர்ந்து வருகிறார்.

தர்ஷாவின் வீடியோக்கள்

தர்ஷாவின் வீடியோக்கள்

குளத்தில் குளிக்கும்வகையிலான அதீத கவர்ச்சியில் இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளியது. அடுத்தடுத்து போட்டோஷுட்கள், அதன் புகைப்படங்கள் என பதிவிட்டு வரும் தர்ஷா குப்தா, பிரபல பாடல்களை தன்னுடைய ஸ்டைலுக்கும் முகத்தின் எக்ஸ்பிரஷனுக்கும் ஏற்ப வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.

பாடல் வீடியோ வெளியீடு

பாடல் வீடியோ வெளியீடு

அந்த வகையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் மிரட்டி வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பெண்ணே என்ற பாடலுக்கும் அழகான கூலர்சுடன் சிறப்பான எக்ஸ்பிரஷனுடன் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் வழக்கம்போல ரசிகர்களின் லைக்சை அள்ளி வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

நடிகை தர்ஷா குப்தா மாடலிங் மூலம் சின்னத்திரை வாய்ப்பை பெற்று தொடர்ந்து குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் மிகவும் பிரபலம். அந்த வகையில் தற்போது மேகம் கருக்காதா பாடலுக்கு இவர் எடுத்துள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X