அன்று ராதா..இன்று சீதா.. தினம் தினம் இணையத்தை திணறவிடும் தர்ஷா குப்தா!

சென்னை : நடிகை தர்ஷா குப்தா ராமன் தேடிய சீதாவாக மாறி இணையத்தை திணறடித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

Recommended Video

Sunny Leone படத்துல நடிக்கிறேன் | Cooku With Comali Dharsha Gupta Exclusive | Filmibeat Tamil

இவருக்கு சின்னத்திரையில் நடித்த சீரியல்கள் மூலமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது தற்போதும் தொடர்ந்து வருகிறது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் அதில் இடும் பதிவுகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

கோயம்புத்தூரை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. தன்னுடைய கல்லூரி காலகட்டத்திலேயே மாடலிங்கில் கவனம் செலுத்தி அதன்மூலம் நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியல்களில்தான். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த முள்ளும் மலரும் ஷோ இவருக்கு எராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

மெடிக்கல் மிராக்கில்

மெடிக்கல் மிராக்கில்

தொடர்ந்து மின்னலே, செந்தூரப் பூவே என சில சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமிடும் வீடியோக்கள், போட்டோஷுட்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதுமே கலர்புல்லாக இருக்கும். அந்த அளவிற்கு ஃபுல் எனர்ஜியோடு இருக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அன்று ராதை

அன்று ராதை

தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும், ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லும் வகையிலும் இவரது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து செல்லும் விதமாக ராதாவாக மாறி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

ராமன் தேடிய சீதை

ராமன் தேடிய சீதை

தற்போது, தர்ஷா குப்தா ராமன் தேடிய சீதையாக மாறியுள்ளார். நீரோடைக்கு இடையே பாறையின் மீது அமர்ந்து கொண்டு, கழுத்தில் ருத்ராச்சை மாலை அணிந்து, கையில் பானையை வைத்துக்கொண்டு ஆற்றங்கரையோரம் ராமனின் வரவுக்காக காத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐ லவ் யூ...ஐ லவ் யூ என அவர் மீது காதல் மழை பொழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X