Dharsha gupta: நீச்சல் குளத்தில் ஒரு ஜாலி குளியல்... தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு தாவியவர்களில் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தர்ஷா குப்தா. இவர் ருத்ரதாண்டவம் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Actress Dharsha gupta swimming pool pics trending on social media

நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தர்ஷா குப்தாவிற்கு சிறந்த என்ட்ரியை கொடுத்தது.

Actress Dharsha gupta swimming pool pics trending on social media

சினிமாவில் தர்ஷா: தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா, சன்னி லியோன் லீட் கேரக்டரில் நடித்திருந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சி மட்டுமே போதாது என்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த காட்சியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனக்கு நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்தார்.

Actress Dharsha gupta swimming pool pics trending on social media

நீச்சல் குளத்தில் : சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் தர்ஷா குப்தா, குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த போட்டோஷூட் படங்கள், ரீல்ஸ் போன்றவை அதிகமான வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் 22 லட்சம் பாலோர்களை வைத்து இருக்கும் இவர், தற்போது, நீச்சல் குளத்தில், குட்டி டவுசர் அணிந்து கொண்டு, ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை ஷேர் செய்த சில மணி நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

Actress Dharsha gupta swimming pool pics trending on social media
Actress Dharsha gupta swimming pool pics trending on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X