Dharsha Gupta: பிகினியில் அதீத கவர்ச்சி.. மழையில் நனைந்த கூல் குல்ஃபி தர்ஷா குப்தா!
சென்னை: சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு தாவியவர்களில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். ருத்ரதாண்டவன் என்ற படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்துவரும் தர்ஷா குப்தா நடிப்பில் சமீபத்தில் ஓ மை கோஸ்ட் படம் வெளியானது.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா, கான்செப்ட் வகையில் பல புகைப்பட சூட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தர்ஷா குப்தாவின் பிகினி வீடியோ: நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின்மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தர்ஷா குப்தாவிற்கு சிறந்த என்ட்ரியை கொடுத்தது.
தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள தர்ஷா குப்தா, சமீபத்தில் வெளியான சன்னி லியோன் லீட் கேரக்டரில் நடித்திருந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சி மட்டுமே போதாது என்ற விமர்சனங்கள் இவர்மீது வைக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் கயிறு கட்டி கஷ்டப்பட்டு நடித்த காட்சியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் தர்ஷா குப்தா.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள், ரீல்ஸ் போன்றவை அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவரை 22 லட்சம் பேர் பாலோ செய்து வருகின்றனர். மேலும் அன்டர்வாட்டர் ஸ்விம்மிங் போன்ற அன்வென்சர் நிகழ்வுகளிலும் இவரை பார்க்க முடிகிறது. அதன் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுக்கிறார்.
பிகினியில் அவ்வப்போது இவர் வெளியிட்டுவரும் வீடியோக்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போதும் பிகினியில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்விம்மிங் குளத்தில் அமர்ந்தபடி, மழையில் நனைந்தபடி, மழையின் சாரலில் நனையத் தோன்றுது என்ற பாடலுடன் இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது. அந்த அளவிற்கு வீடியோவில் கவர்ச்சியை அதிகமாக ஏற்றியுள்ளார் தர்ஷா குப்தா.
இந்த வீடியோவை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஆனாலும் சில ரசிகர்கள் கழுவியும் ஊற்றியுள்ளனர். ஒருவர், இந்த புள்ளைக்கு சினிமா வாய்ப்பு இருந்தா யாராவது கொடுங்க, ஐயோ பாவம் இன்னும் என்னென்ன ட்ரெஸ்ஸெல்லாம் போட்டு வீடியோ போடப் போகுது தெரியல என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ போட்டதால் சினிமாவில் கண்டிப்பாக சான்ஸ் கிடைக்கும் என்று மற்றொரு ரசிகரும் கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











