‘வாழை‘ நடிகையின் தரமான செயல்.. மகிழ்ச்சியில் குழந்தைகள்.. இந்த மனசுதான் சார் கடவுள்!

சென்னை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை திவ்யா துரைசாமிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம். 'வாழை' படத்தில் வரும், தூதுவளை இலை அரைச்சி என்ற பாட்டின் மூலம் ஒட்டுமொத்த, இளசுகளையும் கவுத்துப்புட்டாங்க இந்த அழகி. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் திவ்யா துரைசாமி, கோயம்புத்தூரில் பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று குழந்தைகளுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'குற்றம் குற்றமே' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். பின் எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன், புளூ ஸ்டார், அதர்ம கதைகள் போன்ற படங்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமிக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' இந்த படத்தில் திவ்யா துரைசாமி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

Dhivya Duraisamy photos
Photo Credit:

நடிகை திவ்யா துரைசாமி: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை திவ்யா துரைசாமி, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" சப்ரைஸ் விசிட் கொடுத்தார். இந்த காப்பகத்தில், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக, 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் இந்த காப்பகத்தில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்துகொண்டு சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி குழந்தைகளை மகிழ்வித்தார். அதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

நம்மால் முடிந்த உதவி: அதைத்தொடர்ந்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி, "பெண் குழந்தைகளுடன் நடனமாடிய மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விஷயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே, நம்மால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

கூடுதல் கவனம்: இதைத்தொடர்ந்து "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" காப்பகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் பேசும்போது, "பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வற்காக இந்த காப்பகம் இயங்கி வருகிறது. பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்த இதுபோன்ற நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். மனிதம் வாழும் உலகில், அனைவரும் அனைவருக்குமான உறவுகள், அனைவரையும் அரவணைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை முன்னேற்ற வேண்டும் என பேசினார்.

More from Filmibeat

Read more about: vazhai photos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X