நான் ஒரு இந்தியர் என்பதை மதம் தீர்மானிக்கிறதா? இல்லவே இல்ல அடித்து சொல்லும் பிரபல நடிகை!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான தியா மிர்சா தான் ஒரு இந்தியர் மதம் ஒன்றும் தீர்மானிக்கவில்லை என்ற ரீதியில் கருத்து பதிவிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் போராட்டத்தால் மாநில அரசுகள் திணறி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏற்படும் வன்முறையால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

நடிகை தியா கருத்து

நடிகை தியா கருத்து

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான தியா மிர்சா குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முதல் சில பிரபலங்களில்..

முதல் சில பிரபலங்களில்..

தியா மிர்சா தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் தனது கருத்துக்களைப் பற்றி குரல் கொடுத்து வருகிறார். குடியுரிமை திருத்த மசோதா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட முதல் சில பாலிவுட் பிரபலங்களில் இவரும் ஒருவர்.

செய்யாது என நம்புகிறேன்

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ஒரு டிவிட்டில் "என் அம்மா ஒரு இந்து, என்னை பெற்ற தந்தை ஒரு கிறிஸ்தவர், எனது வளர்ப்பு தந்தை ஒரு முஸ்லீம். எல்லா அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும், எனது மதம் குறித்த இடம் காலியாகவே இருக்கிறது. நான் ஒரு இந்தியர் என்பதை தீர்மானிக்கவா? அது ஒருபோதும் செய்யவில்லை, அது ஒருபோதும் செய்யாது என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

போராட்டத்துக்கு ஆதரவு

போராட்டத்துக்கு ஆதரவு

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் நடிகை தியா மிர்சா கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X