Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடப்பாவமே… அந்த நடிகைக்கும் கொரோனா… வீட்டில் தனிமையில் ஓய்வு !
சென்னை : கொரோனா 3வது அலை மிகவும் தீவிரமாக பரவி நடிகர், நடிகைகளை பதம்பார்த்து வருகிறது.
வீரமே வாகை சூடும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கதக்
நடனக்
கலைஞர்
பண்டிட்
பிர்ஜு
மகாராஜ்
மறைவு...
பிரதமர்,
ஜனாதிபதி,
முதல்வர்
இரங்கல்

அதிதீவிர கொரோனா
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் வேகம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த இரு வாரங்களாக ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பலர் பாதிப்பு
வேகம் எடுத்துள்ள கொரோனா பல திரைப்பிரபலங்களை பதம்பார்த்து வருகிறது. கமல்ஹாசன் தொடங்கி வடிவேலு, அருண்விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், மகேஷ்பாபு, மம்முட்டி, நடிகை ஷோபனா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ரைசா என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா
வீரமே வாகை சூடும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்தி, தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிய போதும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது மற்றபடி நலமாக இருக்கிறேன்.

இரு தடுப்பூசி போட்டுள்ளேன்
மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதாலேயே அறிகுறிகள் லேசாக இருக்கிறது. அனைவரும் தயவுசெய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டு முக கவசங்களை அணிந்துகொண்டு, பாதுகாப்போடு இருங்கள். இன்னும் வலிமையோடு மீண்டு வருவேன்' என்று கூறியுள்ளார்.
Recommended Video

வீரமே வாகை சூடும்
டிம்பிள் ஹயாத்தி, தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டிம்பிள் ஹயாத்தி வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி 26ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.