டைரக்டரை செருப்பால அடிச்சேன்.. என்னை ஆம்பளைன்னு சொல்வாங்க.. டிஸ்கோ சாந்தி ஓபன்!
சென்னை: கோலிவுட்டில் 80கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஐட்டம் பாடல்களில் நடித்துள்ளவர் டிஸ்கோ சாந்தி. 7 வயதிலேயே இந்திப்படத்தில் நடித்துள்ள இவர், அந்த வயதிலேயே தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்ற இயக்குநரை செருப்புக்காலால் எட்டி உதைத்ததாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் டிஸ்கோ சாந்தி.

நடிகை டிஸ்கோ சாந்தி: பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகன் டிஸ்கோ சாந்தி. ஆனந்தன் விஜயபுரி வீரனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவரது பாடாத பாட்டெல்லாம் உள்ளிட்ட பாடல்கள் எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. தற்போதைய ரசிகர்களையும் கவர்ந்து வருபவை. இந்நிலையில் வறுமை காரணமாகவே தான் நடிக்க வந்ததாக நடிகை டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார். துவக்கத்தில் நாயகியாக நடித்த படங்கள் கைக்கொடுக்காத நிலையில், ஐட்டம் பாடல்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. அதையே தன்னுடைய கேரியராக மாற்றிக் கொண்டார் சாந்தி. கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல பாடல்களுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
டிஸ்கோ சாந்தி -ஸ்ரீஹரி திருமணம்: கடந்த 1985 முதல் 1996 வரையிலான காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஒரியா உள்ளிட்ட மொழிகளில் இவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். 1996ம் ஆண்டிற்கு பிறகு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துக் கொண்ட இவர் நடிப்பிலிருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஸ்ரீஹரி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய கணவர் மீது உள்ள காதலால் தான் வீட்டை விட்டு அதிகமாக வெளியில் வருவதில்லை என்று டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார்.
வறுமையால் நடிக்க வந்தேன்: தன்னுடைய அப்பா இறந்தநிலையில், வீட்டில் வறுமையால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட நிலையில், தான் நடிக்க வந்ததாக டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார். தான் நடிக்க வந்தபோது ராஜாராம் என்ற இயக்குநர் தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றதாகவும் ஆனால் தான் போட்டிருந்த ஹை -ஹீல்ஸ் செருப்பால் அவரை எட்டி உதைத்ததாகவும் கூறியுள்ளார் டிஸ்கோ சாந்தி, நாம் தைரியமாக இருந்தால் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கலாம் என்றும் டிஸ்கோ சாந்தி நாயகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது இதுபோல தான் பலரை அடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆம்பளை என்று சொல்லுவார்கள்: அதனால் தன்னை இன்டஸ்ட்ரியில் ஆம்பிளை என்றே கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தன்னைப் போல பல நடிகைகள், குடும்ப கஷ்டத்திற்காக ஐட்டம் பாடல்களுக்கு நடித்துவந்த நிலையில், அவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும்வகையில் தற்போதைய நாயகிகள் உடையணிவதாகவும் அவர்களுடன் கம்பேர் செய்யும்போது தங்களை போன்றவர்களே 1000 மடங்கு தேவலாம் என்று தோன்றுவதாகவும் டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார். துவக்கத்தில் தனக்கு டான்சே வராது என்றும் சில காட்சிகளுக்கே பல மணி நேரங்கள் எடுப்பதை பார்த்து, வெட்கப்பட்டு தானே டான்ஸ் கிளாசில் சேர்ந்து டான்ஸ் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகியுள்ள டிஸ்கோ சாந்திக்கு தற்போது நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதுகுறித்து யோசித்து வருவதாகவும் டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











