கல்லீரல் பாதிப்பு: நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூர்: கல்லீரல் பாதிப்பு காரணமாக நடிகை டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரை உலகில் கவர்ச்சி நடனம் ஆடி வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார், நடனம் ஆடியுள்ளார். 1996ம் ஆண்டில் அவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ராம்போ ராஜ்குமார் படத்தில் கடந்த ஆண்டு நடிக்கையில் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீஹரி மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் டிஸ்கோ சாந்தி பேரதிர்ச்சி அடைந்தார்.
டிஸ்கோ சாந்திக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை அவரது சகோதரியும் நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதாகுமாரி கவனித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











