Disha patani: புஷ்பா 2 நாயகனுடன் ஆட்டம் போட காத்திருக்கும் கங்குவா நாயகி.. சமந்தா போல வருமா?
சென்னை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் இவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பத்து மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூர்யாவின் கங்குவா படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளார். பாலிவுட்டில் எம்எஸ் தோனி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகளும் ரசிகர்களும் கிடைத்துள்ளனர்.
தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் கல்கி 2898 AD படத்திலும் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் திஷா பதானி, பாலிவுட்டில் யோதா, வெல்கம் டு தி ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இதனிடையே தற்போது மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் இவர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

புஷ்பா படம்: ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா என்று நடிகர் அல்லு அர்ஜுனுடன் கெட்ட ஆட்டம் போட்டிருந்தார் நடிகை சமந்தா. இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையும் முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. அந்த வகையில் அந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் சமந்தா. சமந்தாவின் விவாகரத்து சர்ச்சைகளுக்கிடையில் அவர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தது படத்தின் பிரமோஷனுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பட்டது. அது மட்டும் இல்லாமல் அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி, இந்த பாடலில் மிக சிறப்பாக அமைந்தது.
ஊ சொல்றியா மாமா பாடல்: புஷ்பா படத்தின் இந்த பாடல் மட்டும் இல்லாமல் படத்தின் மற்ற பாடல்களும் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருந்த போதிலும் சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்த ஊ சொல்றியா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்த படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் சுகுமாரே இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆட்டம் போட முன்னணி நடிகை ஒருவரை அணுக பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
திஷா பதானி ஆட்டம்: அந்த வகையில் இந்த பாடலுக்கு சமந்தாவே மீண்டும் நடனம் ஆடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இதனுடைய இந்த பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஆட்டம் போட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2015ம் ஆண்டில் தெலுங்கில் உருவான லோபர் படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் திஷா பதானி. அதையடுத்து எம்எஸ் தோனி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்நிலையில் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார்.
கங்குவா படத்தின் நாயகி: இதே போல தமிழ் உள்ளிட்ட பத்து மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூர்யாவின் கங்குவா படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 பட பாடலுக்கு திஷா பதானி நடிக்க உள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா படத்தில் சமந்தாவின் ஊ சொல்றியா பட பாடல் சர்வதேச அளவில் ஹிட்டடித்தது. சமந்தாவிற்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் திஷா பதானிக்கு இந்தப் பாடல் எப்படி அமையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











