Disha Patani: கிளாமரில் 100க்கு 108 வாங்கும் திஷா பாதானி.. இப்படியெல்லாம் போட்டோஸ் இறக்குனா எப்படி?
மும்பை: நடிகை திஷா பதானி இந்திய சினிமா உலகில் மிகவும் கவனம் பெற்ற நடிகையாக உள்ளார். இவரது நடிப்பைக் காட்டிலும் கிளாமரில்தான் இவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். தமிழில் கங்குவா என்ற படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். அந்த படத்திலும் இவரது கிளாமர் காட்சிக்காகவே ஒரு பாடல் வைக்கப்பட்டது போல ஒரு பாடல் படமாக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களைப் பகிர்வார். இப்படி இருக்கும்போது இம்முறையும் அவர் தனது 11 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
திஷா பதானியின் பெயர் அண்மையில் திடுக்கிடும் செய்தியில் இடம் பெற்றது. அதாவது அவரது வீட்டில் இரண்டு பேர் அதிகாலை 3.30 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பெரும் பதற்றமே ஏற்பட்டது. அதன் பின்னர் காவல்துறை எடுத்த நடவடிக்கையில் இரண்டு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அவர்கள்தான் திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிசூடு நடத்தினர் என்று காவல்துறை தெரிவித்தது. திஷா பதானி எப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்களில் வெள்ளை நிற ஆடை உடுத்திக் கொண்டு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் அழகாகவும் கிளாமராகவும் காட்சி அளிக்கிறார். ஒரு புகைப்படத்தில் அவர் சிரித்துக் கொண்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சில ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமெண்ட் செக்ஷனில் ஜொள்ளு வடித்தும் வருகிறார்கள். கடந்த வாரத்தில் கருப்பு உடையில் புகைப்படங்களை இறக்கிய திஷா பதானி, இந்த வாரம் வெள்ளை நிற உடையில் புகைப்படங்களை இறக்கப் போகிறாரா என்று கேள்வி கேட்டும் வருகிறார்கள்.
திஷா பதானி அவரது கிளாமருக்காகவே பெயர் பெற்றவர். இவரது தாராள கிளாமர் இவருக்கு பாலிவுட்டில் பல பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால், இவரது கிளாமரைப் பார்த்து, பாலிவுட்டில் இப்படி இருந்தால்தான் பொழைக்க முடியும்னு விவரம் தெரிஞ்ச புள்ளையா இருக்கே என பலரும் பேசி வருகிறார்கள். அதேபோல் இவரது கிளாமருக்காகவே ஐபிஎல் தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் ஆட்டம் ஆடினார். சினிமாவில் இவரது கிளாமர் ஆட்டத்தையே அவரது ஐபிஎல் நடனம் ஓரம் கட்டியது. இவரை இன்ஸ்டாகிராமில் 62 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











