பேச்சுலர்களின் ஹார்ட் பீட்டை உயர்த்தும் திவ்யா பாரதி..ரசிகர்கள் குஷி!
சென்னை: பேச்சிலர் திரைப்படம் ஜி.வி. பிரகாஷ் குமார்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா பாரதி. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பில் தூக்கலாக கவர்ச்சி கட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய திவ்யா பாரதி, பல பிராண்டுகளுக்கான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் கேமரா முன் நிற்கும் அனுபவத்தை பெற்றார். இதையடுத்து 'Bachelor' படத்தில் படுக்கை அறை காட்சி, லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறினார்.

நடிகை திவ்யபாரதி: சினிமாவைத் தவிர, சமூக வலைதளங்களிலும் திவ்யா பாரதி மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக Instagram மற்றும் Twitter போன்ற தளங்களில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், பிங்க் நிற ஆஃப்-ஷோல்டர் உடையிலான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் தன்னுடைய அழகையும், ஸ்டைலையும் வெளிப்படுத்தியுள்ள திவ்யா பாரதி, மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

க்யூட்டான போட்டோஸ்: 'Bachelor' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான திவ்யா பாரதி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழும் இவர், விஜய்சேதுபதியுடன் மகாராஜா, கிங்டம் போன்ற படத்தில் நடித்தார். ஷிவ் மோஹா இயக்கத்தில் காதல் த்ரில்லர் திரைப்படமாக 'ஆசை' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இந்த மார்ச் மாதம் 6ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. லைம் லைட்டில் இருந்தால் தான் பட வாய்ப்பை பெற முடியும் என்பதற்கான தொடர்ந்து கவர்ச்சி போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது. இதன் மூலம் திவ்யபாரதிக்கு படவாய்ப்பு வருதோ இல்லையோ, ஆனால் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோவால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











