Divya Bharathi: விடிய விடிய.. திவ்ய பாரதி இறக்கிய தரமான வீடியோ.. இன்ஸ்டாகிராம் பத்திக்கிச்சு!
சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்ய பாரதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது கிங்ஸ்டன். இந்த படம் வணிக ரீதியாக தோல்விப் படம் என்றாலும், திவ்ய பாரதியின் நடிப்பு படத்தில் பாராட்டும்படியாக இருந்தது. திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திவ்ய பாரதி நன்கு தமிழ் தெரிந்த, நடிக்கத் தெரிந்த நடிகை. பேச்சுலர் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு இதுவரை தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த படங்களின் எண்ணிக்கை என்றால் மூன்று படங்கள் தான். அதில் ஒரு படத்தில் இரண்டு நிமிட கதாபாத்திரம் மட்டுமே. மற்ற இரண்டு படங்களும் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த படங்கள்.
பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்தார். தனது அறிமுக படத்திலேயே இந்த அளவுக்கு கிளாமராக இவர் நடிக்கிறாரே என மொத்த திரையுலகமும் கவனித்தது. கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதனால், இணையவாசிகள் பலரும் இவர்களின் பிரிவுக்கு நடிகை திவ்ய பாரதி தான் காரணம் என மொய் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

விமர்சனங்கள்: தொடக்கத்தில் இந்த விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தார் திவ்ய பாரதி. இந்த விமர்சனங்களுக்குப் பின்னர்தான், மீண்டும் இவர்கள் இணைந்து கிங்ஸ்டன் படத்தில் நடித்தார்கள். இந்த படத்தில் இவர்கள் இருவரும் கமிட் ஆனதும், மீண்டும் திவ்ய பாரதி மீதான விமர்சனங்கள் டன் கணக்கில் எகிறியது. தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வீடியோக்களை பகிர்ந்தால் கூட, சைந்தவிக்கு ஆதரவாக இருப்பவர்கள், திவ்ய பாரதிக்கு சாபமிட தொடங்கிவிடுவார்கள். அதன் பின்னர் கிங்ஸ்டன் படத்தின் புரோமோஷனின் போது, தனக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் இடையில் இருப்பது, தொழில் தொடர்பான உறவு மட்டுமே.
பதிலடி: அவர், தனது மனைவி சைந்தவியைப் பிரிந்தது எனக்குமே அதிர்ச்சிதான். அவர்கள் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக என்னை யாரும் தேவையில்லாமல் திட்ட மாட்டார்கள். மேலும் நான் ஒருபோதும் ஏற்கனவே திருமணமான ஒரு ஆண் உடன் டேட்டிங்கில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்தார். திவ்ய பாரதியே இப்படி கூறிய பின்னர்தான் இவர் மீதான விமர்சனங்கள் மெல்ல மெல்ல குறைந்தது.

ரீல்ஸ்: திவ்ய பாரதி, அடிப்படையில் விளம்பர மாடல் அழகி. அதில் இருந்து தான் சினிமாவில் நடிக்க வந்தார். சினிமா அவருக்கு இரண்டாவது ஆப்ஷன் தான். அதே நேரத்தில் நல்ல கதையும் அதில் அவருக்கு நடிக்க முன்னுரிமையும் இருந்தால், கட்டாயம் அந்த படத்தை தேர்வு செய்து நடிக்கவும் தயாராக உள்ள நடிகை. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிலர் திவ்ய பாரதி மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











